search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பிரிமீயர் லீக்"

    • கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
    • இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    3-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில், 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.

    இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    அந்த அணியில் பேட்டிங்கில் மெக் லானிங் (4 அரைசதம் உள்பட 308 ரன்கள்), ஷபாலி வர்மா (265 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (235 ரன்), அலிஸ் கேப்சியும் (230 ரன்), பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் மரிஜானா காப் (11 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெஸ் ஜோசசென் (11 விக்கெட்), ராதா யாதவ் (10 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டேவும் (தலா 8 விக்கெட்) அசத்தி வருகிறார்கள்.

    ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடம் பிடித்தது. எலிமினேட்டர் சுற்றில் 5 ரன் வித்தியாத்தில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் நடப்பு தொடரில் அதிக ரன் குவித்தவரான ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி (2 அரைசதத்துடன் 312 ரன்கள்) ஜொலித்து வருகிறார். கேப்டன் மந்தனா (269 ரன்), ரிச்சா கோஷ் (240 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆஷா சோபனா (10 விக்கெட்), ஸ்ரேயங்கா பட்டீல், சோபி மோலினெக்ஸ் (தலா 9 விக்கெட்) வலுசேர்க்கிறார்கள்.

    கோப்பையை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கும்.

    • குஜராத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
    • 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 5-வது வெற்றியை ருசித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

    புதுடெல்லி:

    2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.

    'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் 13 ரன்னில் ஹீலி மேத்யூஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து தயாளன் ஹேமலதா, மற்றொரு தொடக்க வீராங்கனையான கேப்டன் பெத் மூனியுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பெத் மூனி 66 ரன்னில் (35 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) சஜீவன் சஜனா பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த போபி லிட்ச்பீல்டு (3 ரன்), ஆஷ்லிக் கார்ட்னெர் (1 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார்.

    சிறப்பாக ஆடிய தயாளன் ஹேமலதா 74 ரன்னில் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. பார்தி புல்மாலி 21 ரன்னுடன் (13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் சாய்கா இஷாக் 2 விக்கெட்டும், ஹீலி மேத்யூஸ், ஷப்னிம் இஸ்மாயில், பூஜா வஸ்ட்ராகர், சஜீவன் சஜனா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் ஆடிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹீலி மேத்யூஸ் 18 ரன்னிலும், நாட் சிவெர் 2 ரன்னிலும், யாஸ்திகா பாட்டியா 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 95 ரன்களுடனும் (48 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), அமெலி கெர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 5-வது வெற்றியை ருசித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    • காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.
    • பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது.

    பெங்களூரு:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதியது. காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நாட் சிவெர் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.

    'டாஸ்' ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 9 ரன்னிலும், அடுத்து வந்த சப்னினி மேக்னா 11 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டெவின் 9 ரன்னிலும், ரிச்சா கோஷ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 42 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    4-வது வீராங்கனையாக களம் கண்ட எலிசி பெர்ரி நிலைத்து நின்று ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த சோபி மொலினிஸ் 12 ரன்னிலும், ஜார்ஜியா வார்ஹம் 27 ரன்னிலும் வெளியேறினர். 20 ஓவரில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. எலிசி பெர்ரி 44 ரன்களுடனும் (38 பந்து, 5 பவுண்டரி), ஸ்ரேயங்கா பட்டீல் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் நாட் சிவெர், பூஜா வஸ்ட்ராகர் தலா 2 விக்கெட்டும், இஸ்சி வோங், சாய்கா இசாக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 45 ரன்னை எட்டிய போது (3.5 ஓவரில்) யாஸ்திகா பாட்டியா 31 ரன்னில் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) சோபி டெவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ்சிடம் சிக்கினார். அடுத்து ஹீலி மேத்யூஸ் 26 ரன்னிலும் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாட் சிவெர் 27 ரன்னிலும் (25 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.

    15.1 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெலி கெர் 40 ரன்களுடனும் (24 பந்து, 7 பவுண்டரி), பூஜா வஸ்ட்ராகர் 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 3-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது. மும்பை வீராங்கனை அமெலி கெர் ஆட்டநாயகி விருது பெற்றார்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    • மும்பை அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.
    • இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் முதல் ஆட்டம் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

    மும்பையில் உள்ள பிரா போர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது.
    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ஆட்டங்களில் (150 போட்டி) ஆடியவர்.

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 4ம் தேதி முதல் 26ம் தேதி நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 5 அணிகளின் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்மன்பிரீத் கவுரை ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ஆட்டங்களில் (150 போட்டி) ஆடியவர் என்ற பெருமைக்குரியவர்.

    • பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் அசாம் வாங்கும் சம்பளத்தை விட பெண்கள் பிரிமீயர் லீக்கில் மந்தனா அதிக சம்பளம் வாங்க உள்ளார். இந்நிலையில் இதை வைத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் அதிக அளவில் வைரலாகி வருகின்றன.

    ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போன்றே பெண்களுக்கும் 20 ஓவர் தொடர் நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளுக்கு வெற்றி கிட்டும் விதமாக பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன. இந்த 5 அணிகளுக்கும் வீராங்கனைகளை உறுதி செய்ய மும்பையில் நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் 5 அணி நிர்வாகங்களும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 87 வீராங்கனைகள் மொத்தம் ரூ.59½ கோடிக்கு விலை போனார்கள். இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக ரூ.3.40 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.


    இதேபோல் ஆஷ்லி கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நதாலி சிவெரை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும், தீப்தி ஷர்மாவை ரூ. 2.6 கோடிக்கு உ.பி அணியும் ஏலத்தில் எடுத்தன.

    இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் அசாம் வாங்கும் சம்பளத்தை விட ஸ்மிருதி மந்தனா அதிக சம்பளம் வாங்க உள்ளார் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் அசாம் ரூ. 2.3 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரை விட ஸ்மிருதி மந்தனா ரூ. 90 லட்சம் அதிக சம்பளம் வாங்க உள்ளார். இதை வைத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

    • ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
    • ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

    இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:-

    ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும்.

    நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

    இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

    • மும்பை அணி தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை அணி பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான மும்பையை தலைமையிடமாக கொண்ட மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. அந்த அணி நிர்வாகம் தற்போது மும்பை அணியின் பயிற்யாளர் குழுவை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அணியின் ஆலோசகர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் தேவிகா பால்ஷிகார் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    • இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நூஷின் அல் கதீர் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்.
    • பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.

    மும்பை:

    ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இமும்பை, ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது.

    இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கி உள்ளது.

    இந்நிலையில் அந்த அணி தங்களது அணியின் பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸை நியமித்துள்ளது.

    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நூஷின் அல் கதீர் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஆல்ரவுண்டர்கள் துஷார் அரோத்தே மற்றும் கவன் ட்வினிங் ஆகியோர் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் குஜராத் அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×