search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் அரசு"

    • பீகாரில் பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது என்றார்.

    பாட்னா:

    பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் பீகாரில் வாரிசு அரசியல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் பீகார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் பீகார் மாறியுள்ளது.

    சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம்.

    பீகாரில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.

    இங்கிருந்து வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்துவிடக் கூடாது.

    வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

    • 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன.
    • 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

    பாட்னா:

    பீகாரில் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில கல்வித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பள்ளிகளுக்கு ஒழுங்காக வராத 21,90,020 மாணவர்களின் பெயர்களை நீக்கியது. பெயர் நீக்கப்பட்டவர்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய 2.66 லட்சம் மாணவர்களும் அடங்குவார்கள். இதனால் ஏற்கனவே பீகார் அரசு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    இந்த நிலையில், அனுமதியின்றி பணிக்கு வராத 2,081 ஆசிரியர்களின் சம்பளத்தை கல்வித்துறை பிடித்தம் செய்துள்ளது. மேலும் 590 ஆசிரியர்களின் சம்பளக் குறைப்புக்கான பரிந்துரைகளும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 49 பேரை இடைநீக்கம் செய்யவும், 17 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
    • தமிழகத்தில் 3 அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு அரசு சும்மா இருக்க முடியாது.

    பாட்னா:

    தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமீபத்தில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பீகாரை சேர்ந்த குழுவினரும் இங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் பீகார் சட்டசபையில் நேற்று இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பா.ஜனதா எழுப்பியது. இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித்தலைவர் விஜய் குமார் சின்கா, தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்ததை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடந்ததாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினேன். இந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம் அல்லது உண்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது தொடர்பாக தமிழகத்தில் 3 அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு முடிவுகளை வைத்துக்கொண்டு அரசு சும்மா இருக்க முடியாது' எனக்கூறினார்.

    இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அரசு ஒரு அறிக்கையை சபையில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ×