search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைப்பு"

    • டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.
    • கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த வேளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை தாங்கினார்.

    வேளுக்குடி ஊராட்சி தலைவர் நீலமணி பிரகாஷ், சித்தனக்குடி ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் ராசகணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்:-

    மாணவர்கள் பிறமொழி கலப்பின்றி தமிழில் பேசிப்பழக வேண்டும். பிழையின்றி தமிழ் எழுத அடிப்படையாக பாட நூல்களை கடந்து நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும்.

    இலக்கிய படைப்புகளை தந்த ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளிலேயே தனிச்சிறப்பு பெற்ற சொற்களை கொண்ட தஞ்சை வட்டார வழக்கு சொற்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

    நிறைய திருமுறை பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள், நீதி இலக்கியங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக கணித ஆசிரியர் பாலதண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் அறிவியல் ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு கலை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

    • ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மற்றும் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி இலக்கியத் திருவிழாவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்மொழியின் செழுமையினையும், நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும் இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்ககம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கிய திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதில் திருநெல்வேலி, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏற்கனவே இலக்கிய திருவிழா நடந்து முடிந்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் காவிரி இலக்கியத் திருவிழா தொடங்ககியது. இன்று வரை இந்த விழா நடைபெறுகிறது.

    இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும், பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகாலில் படைப்பு அரங்க நிகழ்வுகளும், சங்கீத மகாலில் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

    இவ்விழாவில் 45-க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30-க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளித்தனர்.

    இத்திருவிழாவினை பற்றி விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்த பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி என பல போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

    முதல்-அமைச்சர் நடவடிக்கையால் ரூ.18.43 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் அனைவரும் ஒருமுறை யாவது சென்று பார்க்க வேண்டும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் எப்படி நம் தமிழினம் வாழ்ந்துள்ளது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி. நீலமேகம் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி , மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன், சரஸ்வதி மஹால் நூலகம் நிர்வாக அலுவலர் முத்தையா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் முத்து, பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தினார்.
    • மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தாளாளர் விஜயலெட் சுமி காமராஜ் தலைமை தாங்கினார்.

    பள்ளி நிர்வாகி இளை யராஜா முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சாந்த செல்வி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் மாயக்கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.

    மேலும் பள்ளி மாணவர்களை வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வும், தன்னார்வதிறனை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்.

    இதில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.முடிவில் மெட்ரிக்பள்ளி முதல்வர் அருள் நன்றி கூறினார்.

    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.
    • 145 படைப்புகளை மாணவ-மாணவிகள் சமர்ப்பித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 30-ம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நாகை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் ஆரிப் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாநாட்டு கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் தொடக்கவுரை ஆற்றினார்.

    நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மாநாட்டை தொடக்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், தாசில்தார் ஜெய்சீலன், தனி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் 61 பள்ளிகளை சேர்ந்த 267 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    இதில் 145 படைப்புகளை மாணவ- மாணவிகள் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 15 படைப்புகள் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
    • நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவைகளை தேர்வு செய்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் -ஆலக்குடி சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் "விஞ்ஞான் பெஸ்ட் "என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி ரம்யா சத்தியநாதன் கல்விக்குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

    ரம்யா சத்தியநாதன் கல்வி குழுமச் செயலர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தமிழ்நாடு அறிவியல் கழகத் துணைத் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர்கள் காயத்ரி,

    சுந்தரநாயகி, ரமேஷ் பாபு ஆகியோர் கண்காட்சியின் நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவை களை தேர்வு செய்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    முன்னதாக ரம்யா சத்தியநாதன் பள்ளி ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் ஆ கியோர் நன்றி தெரிவித்து பேசினர்.

    • தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாசிரியர் பாஸ்கரன் கலை இலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் சார்பில் "வாங்க பேசலாம்" கலை, இலக்கிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் வட்டாரக் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.

    அமைப்பின் மாவட்டத் தலைவர் புயல் குமார், மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி,மாவட்டப் பொருளாளர்கைலாசம் ஆகியோர் முன்னிலை வகி த்தனர் நாட்டுப்புறப் பாடகர்கள் கோவிரா சேந்தின், சேதுமாதவன், அகிலா, சுகன்யா, கார்த்திக் உள்ளிட்டோர் தங்களின் படைப்புகளை பதிவி ட்டனர்.

    தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாரியர் பாஸ்க ரன் கலைஇலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    நிகழ்ச்சியில், அமைப்பின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லாசிரியர் வைரக்கண்ணு, சத்தியசிவம், செந்தில்நாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில் பெரும ன்றத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன் எழுதிய வெண்மணிக் காப்பியம் நூல் அறிமுக விழா மற்றும் நூலாசிரியருக்கு பாராட்டு விழாவை ஆக.27ம் தேதி, பஞ்சநதிக்குளம் மேற்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும்இ ளம் தலைமுறையினரிடையே நேரிடும் குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு,பள்ளி, கல்லூரிகளில் நன்நெறி ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    ×