என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தினார்.
- மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மன்னார்குடி:
மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாளாளர் விஜயலெட் சுமி காமராஜ் தலைமை தாங்கினார்.
பள்ளி நிர்வாகி இளை யராஜா முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சாந்த செல்வி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் மாயக்கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.
மேலும் பள்ளி மாணவர்களை வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வும், தன்னார்வதிறனை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்.
இதில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.முடிவில் மெட்ரிக்பள்ளி முதல்வர் அருள் நன்றி கூறினார்.