search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாற்று"

    • 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.
    • பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     மூலனூர்:

    மூலனூர் வட்டாரத்தில் மானியத்தில் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும்மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மூன்று சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை திட்டங்களை பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக அல்லது மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் பெரமியம், எரசனம் பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறலாம். இதில் 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.

    மேலும் பண்ணை குட்டை அமைத்தல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளர்த்தல், நகரும் காய்கறி வண்டிகள்,குளிரூட்டப்பட்ட வண்டி ஆகியவை குறைந்த விலையில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வண்டி வாங்க மானியம் வழங்கப்படும்.

    பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த செலவினம் ரூ. 2 லட்சம் ஆகும். இதற்கான 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே காளான் உற்பத்தி கூடம்அமைக்கும் பெண் விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை 9677776214, 9790526223 என்ற எண்களில் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பா நடவு பணிகளும் நாற்று பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் குறுவை அறுவடை ஏறக்குறைய நிறைவடைந்து விடும் நிலையில் உள்ளது.

    தாம தமாக நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஏரி பாசன பகுதிகளான செங்கிப்பட்டி பகுதியிலும் சில கிராமங்களில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சம்பா நடவு பணிகளும் நாற்றுப் பறிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தாளடி நடவு பணிகளும் மெதுவாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களை உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் முழு வீச்சில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடைபெறும் என்று தெரிய வருகிறது.

    விவசாயிகள் உரத் தட்டுப்பாடு, கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கடன்கள் எளிதில் கிடைக்காத நிலை இருந்த போதிலும் உழவுப் பணிகளிலும் வேளாண் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடவு பணிகளை செய்து விட வேண்டும் என்று விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாற்றுகள் மூழ்கிய நிலையில் உள்ளதால் நாற்றுகள் அழுகி வீணாகி வருகிறது.
    • நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலை உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சம்பா பருவத்தில் நடவு செய்திருந்த பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுருந்த சம்பா பயிர்கள் தொடர்மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி கடந்து சில தினங்களாக நாற்றுகள் மூழ்கிய நிலையில் உள்ளதால் நாற்றுகள் அழுகி வீணாகி வருகிறது.

    ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்த சம்பா விவசாயிகள், தற்போது பெய்து வரும் தொடர்மழையால் நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலையில் உள்ளதால் சம்பா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு உடனடியாக அரசு பயிர் நிவாரண தொகை வழங்க உத்திரவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
    • கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    உடுமலை :

    கத்தரி,மிளகாய் நாற்று தேவைப்படும் உடுமலை வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், விவசாயிகளுக்கு தேவையான கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சிங்காரவேல் 95247-27052, சித்தேஸ்வரன் 88836-10449, காயத்ரி 63790-62232, ராஜ்மோகன் 95854-24502 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×