search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் விபத்து"

    • குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் அதிக அளவு நடந்து வருகிறது.
    • விபத்துக்களை தடுக்க போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கள்ளி குளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 65), தொழிலாளி.

    இவர் இன்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலுக்கு வேலைக்கு புறப்பட்டார். காலை 7.30 மணியளவில் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில் வந்தார்.

    அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே பால்துரை வந்த போது, அந்த வழியாக ஒரு லாரி வந்தது. தாறுமாறாக ஓடிய அந்த லாரி எதிர்பாராதவிதமாக பால் துரையின் ஸ்கூட்டர் மீது மோதியது.

    இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து பால் துரை தூக்கி வீசப்பட்டார். சாலையில் விழுந்த அவர் மீது லாரியின் முன் சக்கரம் ஏறியது. இதனால் பால் துரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பால் துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பால்துரை பலியானது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

    ஆரல்வாய்மொழி போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு சம்பவங்களும் அதிக அளவு நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு உஷாவை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • உஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உஷா பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    மணவாளக்குறிச்சி அருகே கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷா (வயது 38).

    இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்பொழுது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் உஷா மொபட்டில் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.

    கட்டைக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டை கடந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் உஷாவின் மொபட் மீது வேகமாக மோதியது. இதில் உஷா தூக்கி வீசப்பட்டார்.

    8 மாத கர்ப்பிணியாக இருந்த உஷாவிற்கு தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்களும் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உஷாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பிறகு உஷாவை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உஷா பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதல் நிலை காவலர் உஷா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    பலியான முதல் நிலைக் காவலர் உஷா நெல்லை மாவட்டம் மற்றும் நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கொட்டாரம் சந்திப்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பஸ் வந்த போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.
    • மோட்டார் சைக்கிள் மீது எதிர் பாராதவிதமாக அரசு பஸ் மோதியது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இருந்து இன்று பகல் 11 மணிக்கு அரசு பஸ் களியக்காவிளைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    கொட்டாரம் சந்திப்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பஸ் வந்த போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் வந்தனர்.

    அந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர் பாராதவிதமாக அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.

    விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் ஒருவர் இறந்து விட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பலியானவர்கள் திருப்பதிசாரம் பூங்காநகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 38), ஜான்சன் (47) என தெரிய வந்தது.

    • ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த செல்லம்மையை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சியை அடுத்த தென்கரை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமாரக்கண். இவரது மனைவி செல்லம்மை (வயது 72).

    இவர் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக புலியூர்குறிச்சி சென்றார். அங்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். புலியூர்குறிச்சியில் சாலையை கடக்க செல்லம்மை முயன்றார்.

    அப்போது அந்த வழியே நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி கார் வந்தது. அந்தக் கார் எதிர்பாராத விதமாக செல்லம்மை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். இதற்கிடையில் அவர் மீது மோதிய காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த செல்லம்மையை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை செல்லம்மை பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து குமாரக்கண் புகாரின் பேரில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது.
    • இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இரணியல்:

    திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அஸின் (வயது 28).

    இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளியிலிருந்து மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்து சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் மாலையில் மாணவிகளை வீட்டில் இறக்கி விட்டு பஸ்சை வில்லுக்குறி பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதற்காக வில்லுக்குறியில் நிறுத்தி இருந்த பஸ்சை எடுப்பதற்காக வீட்டிலிருந்து வில்லுக்குறிக்கு வந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கி வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அஸின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ரோட்டோரத்தில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸினை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஸின் பலியானது குறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    விபத்து குறித்து இரணியல் போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • புத்தேரி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
    • இதில் பஸ்ஸில் இருந்த 35 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவானார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் வழியாக தேரூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 26-ந்தேதி மாலை 3 மணிக்கு தாழக்குடியிலிருந்து தேரூருக்கு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கிரீசன் தம்பி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக தாழக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இருந்தார்.

    புத்தேரி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த 35 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவானார்.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பஸ் டிரைவர் கிரீசன் தம்பி மீது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பஸ்சை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பஸ் விபத்தில் சிக்கியதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் கிரீசன் தம்பியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • கார் மீது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • தகவல் அறிந்து வந்த கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கருங்கல்:

    புதுக்கடை அருகே உள்ள காடஞ்சேரியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.

    இவர் புதுக்கடை பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது மகன் அஜின் (வயது 22). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார்.

    நேற்று இவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல தனக்கு சொந்தமான பைக்கில் புதுக்கடையில் இருந்து கருங்கல் ரோட்டில் வந்துள்ளார். அப்போது தொலையாவட்டம் மின்வாரிய அலுவலகம் அருகில் ரோட்டில் உள்ள பள்ளத்தில் இவரது பைக் இறங்கியதால் நிலைதடுமாறி எதிரே தேனி மாவட்டம் பி.சி. பட்டியை சேர்ந்த கௌதம் பிரசாத் (26) என்பவர் ஓட்டி வந்த கார் மீது இவரது பைக் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அஜின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×