என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

    கருங்கல் அருகே காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே கீழ்குளம் பரவை, பொத்தையான்விளையை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 52). கட்டிட தொழிலாளி.

    புஷ்பராஜ் நேற்று நெய்யூரில் உள்ள ஒரு பிரார்த்தனை கூடத்திற்கு சென்றார். அவருடன் ஐரேனிபுரம் அடப்புவிளையை சேர்ந்த இன்பராஜ் (56), அவரது மகன் ஆகியோரும் அவரவர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். நெய்யூரில் பிரார்த்தனை முடிந்து மாலையில் வீடு திரும்பினர்.

    மத்திகோடு அருகே வரும்போது, எதிரில் அதிவேகமாக வந்த காரும், புஷ்பராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின.

    இதில் புஷ்பராஜ் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த அடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருடன் சென்ற இன்பராஜ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் வழக்கு பதிவு செய்து இறந்துபோன புஷ்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×