கருங்கல் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மகன் விபத்தில் பலி

கார் மீது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து வந்த கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கருங்கல் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மகன் விபத்தில் பலி
Published on

கருங்கல்:

புதுக்கடை அருகே உள்ள காடஞ்சேரியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.

இவர் புதுக்கடை பேரூராட்சி 1-வது வார்டு அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது மகன் அஜின் (வயது 22). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார்.

நேற்று இவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல தனக்கு சொந்தமான பைக்கில் புதுக்கடையில் இருந்து கருங்கல் ரோட்டில் வந்துள்ளார். அப்போது தொலையாவட்டம் மின்வாரிய அலுவலகம் அருகில் ரோட்டில் உள்ள பள்ளத்தில் இவரது பைக் இறங்கியதால் நிலைதடுமாறி எதிரே தேனி மாவட்டம் பி.சி. பட்டியை சேர்ந்த கௌதம் பிரசாத் (26) என்பவர் ஓட்டி வந்த கார் மீது இவரது பைக் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அஜின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com