என் மலர்
செய்திகள்

மரணம்
ரெயிலில் இருந்து விழுந்து தபால் ஊழியர் பலி
இரணியலில் இன்று ரெயிலில் இருந்து விழுந்து தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இரணியல்:
வெள்ளிச்சந்தை அருகே கல்லடி பகுதியை சேர்ந்தவர் பால் மோகன் வயது 57. இவர் வெள்ளிச்சந்தை தபால் நிலையத்தில் தபால் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்து நெல்லைக்கு செல்வதாக கூறிவிட்டு பால்மோகன் சென்றார். இன்று அதிகாலை அவர் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். மதுரையிலிருந்து புனலூருக்கு செல்லும் பயணிகள் ரெயிலில் பால்மோகன் வந்தார்.
அதிகாலை 4.30 மணி அளவில் இரணியல் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது பால்மோகன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்த பால்மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பால் மோகனுக்கு துளசி என்ற மனைவியும் கார்த்திக் (23), வர்சத் (21) மகன்களும் உள்ளன.

Next Story