25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்டு

புத்தேரி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.இதில் பஸ்ஸில் இருந்த 35 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவானார்.
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்டு
Published on

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் வழியாக தேரூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த 26-ந்தேதி மாலை 3 மணிக்கு தாழக்குடியிலிருந்து தேரூருக்கு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கிரீசன் தம்பி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக தாழக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இருந்தார்.

புத்தேரி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த 35 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவானார்.

விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பஸ் டிரைவர் கிரீசன் தம்பி மீது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பஸ்சை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பஸ் விபத்தில் சிக்கியதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் கிரீசன் தம்பியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com