search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்காசி தொகுதி"

    • காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது.
    • இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    ராஜபாளைம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    முன்னதாக அவர் ராஜபாளையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். பின்னர் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து தென்காசி சாலையில் காந்தி கலை மன்றம், பி.எஸ்.கே.பூங்கா, காந்தி சிலை ரவுண்டானா வரை ரோடு-ஷோ நடத்தினார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே பிரசார வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு வந்து பொது மக்களிடையே பேசியதாவது:-

    தமிழகத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்ய மோடி உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியன் இந்த பகுதியில் முக்கிய நபராக இருந்து வருகிறார். இவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.


    இந்த தொகுதியில் பிரச்சனைகள் அனைத்து சரி செய்யப்படும். காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க. கட்சிக்கும் ஒரே வித்தியாசம் தான். அது, காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    இதற்கு முன்னால் உலக நாடுகள் இந்திய நாட்டின் பேச்சை காது கொடுத்து கேட்டதில்லை. இப்போது மோடி ஆட்சியில் உலக நாடுகள் இந்தியா சொல்வதை கேட்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது, தற்போது மோடி ஆட்சியில் 5-ம் இடத்திற்கு வந்துள்ளது.

    மேலும் நீங்கள் தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெற செய்தால் இந்தியாவின் பொருளாதார நிலையை டாப் 3 இடத்திற்கு முன்னேற்றி கொண்டு வருவோம். மோடியின் ஆட்சியில் எல்லையில் தாக்கி வந்த எதிரி நாடுகளை ஒடுக்கி இந்தியா பலவீனமான நாடு அல்ல, பலமான நாடு என்று உலக நாடுகளுக்கு காட்டி வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையில் 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும். பிரதமராக மோடி 3-வது முறையாக பதவி ஏற்பார். அப்போது உலகின் சூப்பர் பவராக இந்தியா மாறும். அதனால் மோடியின் ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும். எங்கள் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.
    • தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டன.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, தபால் ஓட்டுக்களை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்படி தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டன. மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி நாடார் 1606 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் 673 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, அறிக்கையாக  தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

    மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கியது.
    • கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 350 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    தென்காசி:

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி மாவட்டம் தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, தபால் ஓட்டுக்களை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்படி தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று தபால் ஓட்டு மறு எண்ணிக்கை பணிகள் நடந்தது. இதற்காக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அறையில் இருந்து 4 பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது ஏற்கனவே பதிவு செய்திருந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

    இந்த வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கியது. இதனை கண்காணிப்பாளர் கண்காணித்து வந்தார். ஓட்டு எண்ணிக்கையையொட்டி பழனிநாடார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் பிற வேட்பாளர்களும் வந்திருந்தனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன் தாஸ் பாண்டியன், கோர்ட்டு உத்தரவுப்படி 13 ஏ, 13பி, 13சி ஆகிய மூன்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக செல்வமோகன் தாஸ் பாண்டியன் கூறும் போது, ஐகோர்ட்டில் நாங்கள் தொடர்ந்த வழக்கில் தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    மறு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்ட 13 ஏ கவர்கள், 13 பி -வாக்காளர்களின் முழு விவரம், 13 சி-யாருக்கு வாக்களித்தார்கள் என்பதற்கான ஓட்டுச் சீட்டு ஆகிய 3 பேப்பர்களையும் கணக்கில் எடுத்து கொண்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று 13 'சி' சீட்டுகளை மட்டுமே எண்ணப்படுகிறது. தற்போது நான் தெரிவித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரிவித்தார். சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    மறு வாக்கு எண்ணிக்கையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மேற்பார்வையில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 350 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ×