search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சுடும் போட்டி"

    • முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது.
    • துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    வண்டலூர்:

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. நாளை வரை இந்த போட்டிகள் நடை பெறுகின்றன.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    • வடக்கு மண்டல அளவில் நடந்தது
    • பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்

    திருவண்ணாமலை:

    செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர்.கண்ணன் தலைமையில் கடந்த 3,.4 ஆகிய இரண்டு நாட்கள் வடக்கு மண்டல காவல்துறை அளவில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

    இதில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும், பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் 2-ம் இடத்தையும் வென்றார்.

    மேலும் வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்தி ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் 2-வது இடத்தையும் வென்றார்.

    இதன் தொடர்ச்சியாக பெண் காவலர்களுக்கென நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்.

    • சேரா பயிற்சி மையத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் அனு பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் ஆன்டோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சேரா துப்பாக்கிசுடும் பயிற்சி மையம் ராகல்பாவி பிரிவில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. 9 வயது சிறுவர்கள் முதல் 90 வயதிற்கும் மேல் உள்ள நபர்கள் வரை இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    14க்கும் மேற்பட்ட வீரர்கள் 47வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்று உள்ளனர். மேலும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகளில் நான்கு வீரர்கள் தகுதி பெற்று, 65வது தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், சேரா பயிற்சி மையத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் அனு பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இந்த வீரர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கும் விழா குடியரசு தினத்தன்று உடுமலைப்பேட்டை காவல்துறை துணைகண்காணிப்பாளர் தேன் மொழிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் ஆன்டோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார்.

    வருங்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதே 'சேரா துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் குறிக்கோள் என மையத்தின் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தங்கப்பதக்கம் கிடைத்திருந்தால் தமிழக அரசின் ரூ.5 லட்சம் ரொக்க பரிசு கிடைத்திருக்கும்.
    • மீண்டும் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடத்துவார்கள்.

    திருச்சி:

    அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு செங்கல்பட்டு மாவட் டம் ஓதிவாக்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பல்வேறு தரவரிசையில் உள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் மத்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் கமாண்டோ பிரிவில் திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சோபியா லாரன் என்ற 42 வயது பெண் தலைமைக் காவலர் இடம் பெற்றார். தமிழ்நாடு போலீஸ் அணியில் இருந்து வந்துள்ள ஒரே பெண்மணி இவராக இருந்தார்.

    இவருக்கான போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முட்டி போட்டுக்கொண்டும், படுத்துக் கொண்டும், நின்று கொண்டும் இலக்கை நோக்கி சுட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    அவருக்கான போட்டி நடைபெற்றபோது மதியம் 12.45 மணி ஆகிவிட்டது. இதனால் சூரிய வெளிச்சத்தில் அவரால் இலக்கை நோக்கி சுட முடியவில்லை. அனைத்து தோட்டாக்களும் நெற்றி பொட்டில் போய் உட்கார்ந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் போலீஸ்காரர் ஒருவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்று விட்டார்.

    இதுதொடர்பாக சோபியா கூறும்போது, மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கினேன். ஆனால் இலக்கை தொட முடியவில்லை. தங்கப்பதக்கம் கிடைத்திருந்தால் தமிழக அரசின் ரூ.5 லட்சம் ரொக்க பரிசு கிடைத்திருக்கும்.

    மீண்டும் 2024-ம் ஆண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்க தயார் செய்வேன். மீண்டும் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடத்துவார்கள். அதில் வெற்றி பெற்றால் மாநில போட்டியில் பங்கேற்க வைப்பார்கள். அதில் முதலிடம் பெற்றால் தேசிய போட்டியில் பங்கேற்க முடியும். அடுத்த வருடம் நடைபெறும் தேசிய போட்டியில் தங்கம் வெல்ல இலக்கை நோக்கி பயணிப்பேன் என்றார்.

    • இன்றைய வெற்றியின்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    தென்கொரியாவின் டேகு நகரில் 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் பிஸ்டல் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. மனு பாகெர், ஏஷா சிங், ஷிகா நர்வால் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் மின்சியோ, கிம் ஜூகி, யாங்ஜின் ஆகியோர் கொண்ட அணியை 16-12 என வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருநாள் போட்டி மீதமுள்ளது.

    இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ரிதம் சங்வான், பாலக் மற்றும் யுவிகா தோமர் ஆகியோர் கொண்ட இந்திய அணி, தென்கொரியாவின் கிம் ஜங்மி, கிம் போமி மற்றும் யூ ஹின்யாங் ஆகியோர் கொண்ட அணியிடம் 12 -16 என தோல்வியடைந்தது. 

    • தனியார் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.
    • கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்தனர். மாணவ- மாணவிகளை கலெக்டர் சமீரன் பாராட்டினார்.

    கோவை:

    கோவை நேரு ரைபிள் கிளப்பை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

    இதில் டுவிங்கிள் யாதவ் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவி பிரீத்தி மாஸ்டர் உமன் பிரிவில் தங்கப்பதக்கமும் மற்றும் ஜெய்கிஷோர் தங்கப்பதக்கமும், கார்த்திக் தனபால் வெண்கல பதக்கமும் வென்றனர். சஜய் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றார்.

    மாணவி ஸ்வர்ணலதா தங்கப்பதக்கமும், வெள்ளி பதக்கத்தையும், மாணவி பிரியதர்ஷினி வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். மொத்தம் 4 தங்கப்பதக்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

    இவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்தனர். மாணவ- மாணவிகளை கலெக்டர் சமீரன் பாராட்டினார்.

    அப்போது நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் நேரு ரைபிள் கிளப் தலைவர் டாக்டர் பி. கிருஷ்ணகுமார் மற்றும் செயலார் எஸ். அஜய் மற்றும் நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி சாதனை
    • தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    பிரான்சின் சாட்டௌரோக்ஸ் நகரில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இதில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா 250.6 என்ற உலக சாதனை புள்ளியுடன் நேற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து இந்தியாவின் ஸ்ரீஹரி தங்கப்பதக்கம் வென்றார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி, சீன ஜோடியான யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். இந்த தொடரில் இந்திய அணி வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

    தங்கப் பதக்கம் வென்ற மணீஷ் நர்வால், ரூபினா பிரான்சிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ×