search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shooting Competition"

    • மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபில் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது.
    • போட்டியில் மாணவர் ஆகாஷ் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் பெற்றார்.

    நெல்லை:

    48-வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபில் கிளப் அரங்கத்தில் கடந்த 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட இளையோர்கள் 10 மீட்டர் ரைபிள் போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    அவரை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர் திரு மாறன், பள்ளியின் முதல்வர் முருகவேள், பள்ளி ஒருங்கி ணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரி யர்கள் மோகன்குமார், பூச்சிய ம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • வடக்கு மண்டல அளவில் நடந்தது
    • பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்

    திருவண்ணாமலை:

    செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர்.கண்ணன் தலைமையில் கடந்த 3,.4 ஆகிய இரண்டு நாட்கள் வடக்கு மண்டல காவல்துறை அளவில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

    இதில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும், பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் 2-ம் இடத்தையும் வென்றார்.

    மேலும் வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்தி ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் 2-வது இடத்தையும் வென்றார்.

    இதன் தொடர்ச்சியாக பெண் காவலர்களுக்கென நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்.

    • நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
    • ருத்ரங்க்ஷ் பாட்டில் அவருடன் போட்டியிட்ட மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.

    எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்து உள்ளது.

    10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில், ஜெர்மனி வீரர் மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

    • பாளை தனியார் பள்ளி மைதானத்தில் என்.சி.சி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் முதல் நாளில் மொத்தம் 60 மாணவிகள் பங்கேற்றனர்.

    நெல்லை:

    பாளை தனியார் பள்ளி மைதானத்தில் என்.சி.சி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. தேசிய மாணவியர் மூன்றாம் படைப் பிரிவினருக்கு கர்னல் தீபக்சிங் சாமந்த் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதல் நாளில் மொத்தம் 60 மாணவிகள் பங்கேற்றனர்.அதில் சிறந்த முறையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 30 மாணவிகள் இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 30 மாணவிகள் பங்கேற்றுள்ள நிலையில் அதில் 10 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் வரும் மார்ச் மாதம் மதுரையில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். போட்டியில் மாணவர்களை தேர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் தலா 3 சுற்றுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சரியாக இலக்கை நோக்கி சுட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • சேரா பயிற்சி மையத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் அனு பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் ஆன்டோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சேரா துப்பாக்கிசுடும் பயிற்சி மையம் ராகல்பாவி பிரிவில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. 9 வயது சிறுவர்கள் முதல் 90 வயதிற்கும் மேல் உள்ள நபர்கள் வரை இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    14க்கும் மேற்பட்ட வீரர்கள் 47வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்று உள்ளனர். மேலும் தெற்கு மண்டல அளவிலான போட்டிகளில் நான்கு வீரர்கள் தகுதி பெற்று, 65வது தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், சேரா பயிற்சி மையத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் அனு பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இந்த வீரர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கும் விழா குடியரசு தினத்தன்று உடுமலைப்பேட்டை காவல்துறை துணைகண்காணிப்பாளர் தேன் மொழிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் ஆன்டோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார்.

    வருங்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதே 'சேரா துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் குறிக்கோள் என மையத்தின் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 7 மாநில வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஓபன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன்.
    • துப்பாக்கிச் சுடும் போட்டியில் நிச்சயமாக சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    திருச்சி:

    செங்கல்பட்டு மாவட்டம் ஓதிவாக்கத்தில் 23-வது அகில இந்திய காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நேற்று முதல் வருகிற 13 வரை நடைபெறுகிறது. இதில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பல்வேறு தரவரிசையில் உள்ளவர்கள் பங்கேற்கின்றனர்.

    நிகழ்ச்சியை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். 2011-ம் ஆண்டுக்கு பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்கின்றன. அவர்களில் 8 பேர் மத்திய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இதில் தமிழ்நாடு போலீஸ் கமாண்டோ பிரிவில் திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சோபியாலாரன் என்ற 42 வயது பெண் தலைமைக் காவலர் இடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அணியில் இருந்து வந்துள்ள ஒரே பெண்மணி இவர் மட்டும்தான்.

    திருச்சி அருகே உள்ள கல்லணை தோகூர் பகுதியைச் சேர்ந்த சோபியா கூறும்போது, நான் 2004-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தேன். நான் மாநில மற்றும் தேசிய போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். மாநில அளவில் மற்றும் சிவிலியன் நிகழ்வுகளில் நான் பல பதக்கங்களை வென்றுள்ளேன். என்னுடைய போட்டி இன்று நடைபெறுகிறது.

    நான் ஏற்கனவே தேசிய அளவிலான துறை ரீதியிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். 7 மாநில வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஓபன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். இந்தப் போட்டியில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். பிளஸ்-2 வகுப்புக்குப் பிறகு நான் சீருடை அணிந்த சர்வீஸ்களில் சேர விரும்பினேன்.

    எனது முதல் துப்பாக்கி சுடுதல் போட்டி 303 வகை ரைபிளுடன் இருந்தது. அதுமுதல் நான் எந்த துப்பாக்கி சுடும் போட்டியையும் தவறவிட்டதில்லை. இதில் நிச்சயமாக சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார். 

    ×