search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்து"

    • இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார்
    • என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார்

    நாகர்கோவில் : திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பென்னி சாலமன் (வயது 45). இவர் நேற்று தனது காரில் நாகர்கோவில் சென்றார். பின்பு இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து திங்கள்நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜான் வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. கார் தீப்பிடிக்க தொடங்கியதும் சாலமன் இறங்கி விட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம்.
    • குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது

    நாகர்கோவில் :

    தக்கலை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம். இந்த மருத்துவமனையின் பின்புறம் பிணவறை உள்ளது. அதனருகில் மருத்துவ மனை ஊழியர்கள் குப்பை கழிவுகள் போடுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை அந்த குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை கண்ட நோயாளிகள் பலர் ஓட்டம் பிடித்தனர்.

    இது பற்றி அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீயை அணைந்தனர்.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க. கவுன்சிலர் கூறும் போது, "தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுகளை அதற் கான குடியிருப்பு இல்லாத பகுதியில் கொட்டி எரித் தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அரசு இது குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேற்று இரவு வேலை முடிந்து அசோக் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத்தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை- நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இங்கு தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பழைய மரப்பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று இரவு வேலை முடிந்து அசோக் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அப்போது நள்ளிரவில் திடீரென மரக்கடையில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவி மரப்பொருட்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் மரப்பீரோக்கள், கட்டில்கள், மரப்பொருட்கள் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கட்டைகள் முழுவதும் எரிந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த மரக்கடைக்கு பின்புறம் உள்ள கடைகளின் மீது தீ பற்றி எரிந்துவிடக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன் இந்த குடோன் பகுதிக்குள் நின்று கொண்டு மரக்கடைக்குள் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர்.

    நீண்ட நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25) . இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள்.
    • வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.

    பவானி,

    பவானி மண் தொழிலாளர் 2-வது வீதியை சேர்ந்தவர் ஸ்ரீ ரங்கன். இவரது மனைவி லட்சுமி (50) இவர்களின் மகள் ரேவதி (25). இவர்கள் அனைவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களது வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பு பழுதானது.

    இதையடுத்து அவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் எலக்ட்ரீசியன் கணேஷ் (35) என்பவரை அழைத்து கியாஸ் அடுப்பை பழுது பார்க்க சொன்னார்கள்.

    கணேஷ் கியாஸ் அடுப்பை பழுது பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் லட்சுமி அவரது மகள்ரேவதி, மற்றும் எலக்ட்ரீசியன் கணேஷ் ஆகிய 3 பேரும் தீ காயம் ஏற்பட்டு அலறி சத்தம் போட்டு உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

    ரேவதிக்கு முதுகுபகுதி, முகம், கை, கால் என 50 சதவீதம் தீக்காயமும், லட்சுமிக்கு இடது கை, கால் என 35 சதவீதம் தீக்காயமும், கணேஷ் கை, கால் முகம் என 30 சதவீதம் தீக்காய த்துடன் பெருந்துறை ஐ .ஆர். டி .டி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • எதிர்பாராத விதமாக சஸ்விதாவின் பட்டுப் பாவாடையில் தீ பற்றியது.
    • தீ மளமளவென பரவியதில் சஸ்விதாவின் வயிற்றுக்கு கீழ் தீக்காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூரை அடுத்துள்ள கிழக்கு புதூரை சேர்ந்தவர் சரவணன் (48). விவசாயி. இவரது மகள் சஸ்விதா (7). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி மாலை பொல்லநாயக்கன் பாளையத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டின் பூஜை அறையில் உள்ள விளக்கில் மத்தாப்பூ பற்ற வைத்துள்ளார்.

    இதில் எதிர்பாராத விதமாக சஸ்விதாவின் பட்டுப் பாவாடையில் தீ பற்றியது. தீ மளமளவென பரவியதில் சஸ்விதாவின் வயிற்றுக்கு கீழ் தீக்காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக சிறுமி சஸ்விதாவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சஸ்விதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 5 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. வீடுகளில் இருந்த பீரோ, நகை, பணம், டிவி, மிக்சி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு ஆவணங்களும் தீயில் கருகின.

    வீடுகளில் பிடித்த தீ, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலிலும் பரவியது. இதில் பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. விசாரணையில், உசேன் என்பவருடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதால் இந்த தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

    விபத்து குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுளையும் செய்தனர்.

    பின்னர், ஆத்தூர் நகர தி.மு.க செயலாளர் பாலசுப்பிரமணியம் வழி காட்டுதலின்படி, ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கான வசதியும், தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

    • சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீ பிடித்தது.
    • இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னிமலை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அனிதா (31).இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட னர்.

    அனிதாவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானது. முதல் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அவர் மூலம் அனிதாவுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜெய க்குமார் மூலம் அனிதாவுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    ஜெயக்குமாரும், அனிதாவும் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 15 நாட்களாக சென்னிமலை அடிவார பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு அனிதாவின் மகள் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு அனைவரும் தூங்கி விட்டனர். இதையடுத்து அதிகாலையில் சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அனிதாவின் மீது தீ பிடித்தது. இதை தொடர்ந்து முகம், சேலை யில் தீ பிடித்து எரிந்தது. இதனால் அனிதா அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த அனிதாவின் கணவர் ஜெயக்குமார் ஓடி வந்து அனிதாவின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அனிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி, வீராச்சி பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவ சாயம் செய்து வருகிறார். இவரது வீடு தென்ன ங்கீற்று ஓலைகளால் வேயப்பட்ட குடிசை வீடா கும்.

    இந்த நிலையில் காலை இவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின்சார வயரில் இருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் ஓலை மீது தீப்பொறிபட்டது.

    இதனால் ஓலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடன டியாக வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தப்பினார்.

    இதையடுத்து அக்கம் பக்கம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.

    ×