இரணியல் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார்என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார்
இரணியல் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
Published on

நாகர்கோவில் : திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பென்னி சாலமன் (வயது 45). இவர் நேற்று தனது காரில் நாகர்கோவில் சென்றார். பின்பு இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரையில் காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து திங்கள்நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜான் வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. கார் தீப்பிடிக்க தொடங்கியதும் சாலமன் இறங்கி விட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com