search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாள பராமரிப்பு பணி"

    • அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
    • இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி ரெயில் தண்டவாள பகுதியில் அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    இதனால் அந்தப் பகுதி முழுவதும் மணல் தூசியுடன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    ஆகவே முன்னறிவிப்பு செய்து இந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.
    • பயணிகள் வசதிக்காக ரெயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை- போத்தனுார் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்ததால், 1ந் தேதி முதல் 20ந் தேதி வரை பாலக்காடு- கோவை (06806), சொரனூர்- கோவை (06458), மதுரை- கோவை (16722), கோவை- கண்ணூர் (16608) உள்ளிட்ட 6 ெரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் பழைய அட்டவணை படி ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபல்பூர் - கோவை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:50 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு கோவை வந்தடையும். பயணிகள் வசதிக்காக இந்த ெரயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை - ஜபல்பூர் ரெயில், கோவையிலிருந்து திங்கட்கிழமை புறப்பட்டு ஜபல்பூரை புதன்கிழமை சென்றடையும்.கோவையில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 19, 26, ஜூலை 3 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது.
    • ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.

    திருப்பூர் :

    போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், வருகிற 30-ந் தேதி ரெயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து, ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பயணிக்காது. மாறாக சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும். அங்கிருந்து கேரளா நோக்கி செல்லும்.சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு செல்லும் ரெயில் திருச்சியில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கேரளா சென்று மங்களூரு செல்லும்.

    வழக்கமான வழித்தடமான குளித்தலை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் ரெயில் நிலையம் செல்லாது. ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.பாலக்காடு செல்லாது.

    ஷாலிமர் - நாகர்கோவில், திப்ரூகர் - கன்னியாகுமரி, இரு ரயில்களும் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.புது டெல்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.

    நாளை 30-ந் தேதி பாட்னா - எர்ணாகுளம் நான்கு மணி நேரம், சில்சார் - திருவனந்தபுரம் ரெயில்கள் 3 மணி நேரம் 20 நிமிடம், புதுடில்லி - திருவனந்தபுரம், கேரளா எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் வழித்தடத்தில் ஏதுவான பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக, சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜோத்பூர்- தாம்பரம் (06056) இடையேயான சிறப்பு ரெயில் நாளை 30, மே 7 ஆகிய தேதிகளில் மாலை 5:30 மணிக்கு ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 7:15மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்- ஜோத்பூர் (06055) சிறப்பு ரெயில் மே 4-ந் தேதி பிற்பகல் 2மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு சனிக்கிழமை மாலை 5:20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.இந்த ெரயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, பன்வால், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×