search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்மன்"

    • நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார்
    • மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே நடந்தது

    மார்த்தாண்டம் :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே உள்ள லாறி பேட்டையில் பொதுமக்களுக்கு வசதியாக கழிவறை இல்லாத நிலை இருந்தது. எனவே நவீன கழிவறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் அதிநவீனமான கழிவறை கட்டப்பட்டது.இந்த கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன்,துணைத் தலைவர் பிரபின் ராஜா,கவுன்சிலர்கள் சர்தார்ஷா,விஜு, நகராட்சி வழக்கறிஞர் ஷாஜிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 6 அ.தி. மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ள னர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார் தலைமை யில் நடைபெற்ற கவுன்சிலர் கள் கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சி லர்கள் உள்பட 12 கவுன்சி லர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத் திட்டனர். இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழக அரசி தழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக நலன் கருதி நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை நரிக்குடி ஒன்றிய சேர்மனாக (பொறுப்பு) செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இன்று (23-ந் தேதி) நரிக்குடி ஒன்றிய சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலர்களும் வந்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் நடந்தது.

    அப்போது நரிக்குடி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர் காளீஸ்வரி சமயவேலு போட்டி யிடுவதாக அறிவித்தார். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கவுன்சி லர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து காளீஸ்வரி சமயவேலு நரிக்குடி ஒன்றிய சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • நரிக்குடி ஒன்றியத்திற்கு பொறுப்பு சேர்மன் பதவியேற்றார்.
    • கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

    இதுகுறித்து விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்ப ட்டது. அதனை ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.

    அந்த அறிக்கையை பரிசீலனை செய்த ஊரக தழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து சேர்மன் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் இல்லாததால் பல மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை சேர்மனாக (பொறுப்பு) செயல்பட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மனாக அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், வாசுகி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் அம்மன்பட்டி, அரசு அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நரிக்குடி ஒன்றிய புதிய சேர்மனான அம்மன்பட்டி ரவிச்சந்திரனுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    அம்மன்பட்டி மற்றும் உடைய சேர்வைக் கார் பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொறுப்பு சேர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    • நரிக்குடி சேர்மனுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது.
    • வளர்ச்சி திட்ட பணிகள் நேரில் சென்று கண்காணிக்கப்படுகிறது.

    திருச்சுழி

    தமிழகத்திலுள்ள அனைத்து ஒன்றிய சேர்மன்களுக்கும் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று கண்காணிக்கும் பொருட்டு புதிய ஸ்கார்பியோ கார்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மனுக்கு நரிக்குடி ஒன்றியங்களில் மேற் கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று கண்காணிக்கும் பொருட்டு புதியதாக ஸ்கார்பியோ கார் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்காக ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் வழங்கப்பட்டது. நரிக்குடி ஒன்றிய சேர்மனுக்கு புதிய ஸ்கார் பியோ கார் கொடுத்த நிலையில் தற்போது பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பழைய டாடா சுமோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது.
    • சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் ஊராட்சி சிறுவத்தூர் திடீர்குப்பம் சாலை முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.29.76 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைப்ப தற்கான பணிபூமி பூஜை யுடன் தொடங்கியது. இதில் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் கலந்து கொண்டு சாலை போடும் பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் விஜயதேவி தேவராசு, அங்கு செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு தெய்வீக சிகாமணி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். என்ஜினியர் ஜெய்சங்கர், அரசு ஒப்பந்ததாரர் ராமதாஸ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ் ணன், அங்கு செட்டிபாளை யம் தி.மு.க. ஊராட்சி செய லாளர் சிற்றரசு, ஊராட்சி செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி எஸ்.புதூர் ஒன்றியத்தில் மாவட்ட சேர்மன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.
    • சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன். இவர் அ.தி.மு.க.வில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தன்னை இணைத்துக் கொண்டார்.

    கட்சி பணியோடு சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு தொழில்களில் முனைப்பு காட்டும் தொழிலதிபராக வலம் வருகிறார். இவர் ஈட்டும் வருமானத்தை கட்சி பணிக்கு அப்பாற்பட்டு கோவில் கட்டுதல், கல்விக்கூடங்கள் கட்டிக்கொடுத்தல், ஏழை-எளிய மக்களுக்கு திருமண உதவி செய்தல் போன்ற பல்வேறு அறப்பணிகளில் முழுமையாக அர்ப்பணிக்கும் மனிதராகவும் இருந்து வருகிறார்.

    கொரோனா நேரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த பகுதி மக்களின் ஒவ்வொ ருவரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து அவர்களின் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார்.

    இவரின் இத்தகைய செயல் இந்த பகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கட்சி மேலிடத்தியிலும் நன்மதிப்பை பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்குள் பொன்மணி பாஸ்கரன் மெல்ல மெல்ல அசுர வளர்ச்சி அடைந்து அ.தி.மு.க. கிளை செயலாளர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளை வகித்து தற்போது சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும், மாவட்ட பேரவை துணைச் செயலா ளராகவும்பதவி வகித்து வருகிறார்.

    இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 12-ந் தேதி சென்னையில் உள்ள திருமண மகாலில் மகள் ஹரிப்பிரியா-ஜெயக்குமார் ஆகியோரது திருமணம் நடந்தது. அதனுடைய வரவேற்பு விழாவை, தான் பிறந்த ஊரில் வைக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கினார்.

    அதற்காக பிரமா ண்டமாக ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்டம் குன்னத்தூரில் அருகே உள்ள ஓ.வி.எம். கார்டனில் நடந்தது.

    வரவேற்பு விழாவில் முன்னாள் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

    திருமண வரவேற்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமக்கள் சார்பில் சீர் செய்யும் விழா நடத்தினர். சுமார் 504 ஆட்டுக்கிடாக்கள், ஆளுயுர குத்துவிளக்கு, தாமிர பானை, சேலை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை குன்னத்தூர் கண்மாய் கரை சாலை நெடுகிலும் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் திருமண வரவேற்பு பந்தலுக்கு கொண்டு வந்தனர்.

    சீர் கொண்டு வந்த அனைவரையும் பொன்மணி பாஸ்கரன் குடும்பத்தினர் நன்றி கூறி வரவேற்றனர்.

    விழாக்கோலம் போல் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் சீர் எடுத்து வந்தது காண்போர் மத்தியில் ஆனந்தத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.

    • சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வழங்கினார்.
    • கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000, பொருட்களை வழங்கினார்.

    சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன், முன்னாள் யூனியன் சேர்மன் முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர் பாண்டிகன், கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராம்கோ முன்னாள் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ராஜபாளையத்தில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் முன்னாள் ராம்கோ சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவின் 87-வதுபிறந்தநாள் விழா நடை பெற்றது. விழாவில் அன்னாரது நினைவிடத்தில் கீதாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, அவரது மகன் பி.வி. அபிநவ் ராமசுப்பிரமணி ராஜா மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதனைத்தொடர்ந்து அபிநவ வித்ய தீர்த்த பாரதி வேத பாடசாலையில் அமைந்துள்ள பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா திருஉருவச் சிலைக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னாரது ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார். நினைவு ஜோதியை ராம்கோ டெக்ஸ் டைல்ஸ் பிரிவு ஊழியர்கள் ஏந்தி சாரதாம்பாள் கோவிலில் இருந்து ராம மந்திரம் இல்ல வழியாக ராஜபாளையம் மில்ஸ் வளாகத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டது.

    விழாவை முன்னிட்டு சஞ்சய் சுப்பிரமணியன் கர்நாடகா இசை நிகழ்ச்சியும், ஸ்ரீதேவி ந்ருத்யாலயா குழுவின் அகோபிலம் அகோபலம் நாட்டிய நாடகம் ராஜபாளையத்தில் உள்ள திருமலைதிருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 3 நாட்களுக்குள் இதை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • குடிநீர் வீணாகும் குழாயை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது நகர்ப்பகுதியில் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நகராட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே ஒரு வருடத்திற்கும் மேலாக மெயின் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு குடிநீர் திறந்து விடும் நேரங்களில் எல்லாம் அதில் அந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறும் சூழ்நிலை நிலவி வருகின்றது. இது குறித்து பலமுறை குடிநீர் வடிகால் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வீணாகும் குடிநீர் குழாயை சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு நடத்தி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம், பல மாதங்களாக குழாயில் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 3 நாட்களுக்குள் இதை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழாய் மெயின் பகுதியில் அமைந்துள்ளதால் இந்த பகுதியில் உள்ள இந்த குடிநீர் வீணாகும் குழாயை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது நகர்ப்பகுதியில் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நகராட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இதை சரி செய்யும் பட்சத்தில் தண்ணீர் திறந்து விடும் போது குடிநீர் வீணாகாமல் தண்ணீர் திறந்துவிடும் இடங்களுக்கு முழு அளவில் தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

    ×