தூய்மை இந்தியா திட்டத்தில் நவீன கழிவறை கட்டிடம்

நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார்மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே நடந்தது
தூய்மை இந்தியா திட்டத்தில் நவீன கழிவறை கட்டிடம்
Published on

மார்த்தாண்டம் :

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே உள்ள லாறி பேட்டையில் பொதுமக்களுக்கு வசதியாக கழிவறை இல்லாத நிலை இருந்தது. எனவே நவீன கழிவறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் அதிநவீனமான கழிவறை கட்டப்பட்டது.இந்த கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன்,துணைத் தலைவர் பிரபின் ராஜா,கவுன்சிலர்கள் சர்தார்ஷா,விஜு, நகராட்சி வழக்கறிஞர் ஷாஜிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com