என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வழங்கல்
- சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வழங்கினார்.
- கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000, பொருட்களை வழங்கினார்.
சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன், முன்னாள் யூனியன் சேர்மன் முத்துராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர் பாண்டிகன், கிளை செயலாளர்கள் ராமன், ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






