search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மொழி"

    • செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை
    • வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என மத்திய மந்திரி தகவல்

    கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பத்ரிநாத், துவார்கா, ஜெகனாத், ராமேசுவரம் மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து இடங்களில் வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பகுதியில் ''செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரியத்தின் பிராந்திய மையம் ராமேசுவரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு'' என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் கேட்ட கேள்விக்கு, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அளித்த பதிலைத் தொடர்ந்து சு.வெங்கடேசன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    • பெயர் பலகைகளில் தமிழில் எழுதக்கோரி கால வரையற்ற பட்டினி அறப்போர் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
    • தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி புதிய பஸ் நிலையம், பாளை பஸ் நிலையம், வ.உ.சி. விளையாட்டு திடல் பெயர் பலகைகளில் தமிழ் ஆட்சிமொழி சட்ட அரசாணைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி தமிழில் எழுதக்கோரி கால வரையற்ற பட்டினி அறப்போர் தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் புதிய பஸ் நிலையம் முன்பு இன்று நடைபெற்றது.

    பட்டினி போராட்டம்

    போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அப்புகுட்டி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சேரன்துரை, ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அப்போது வியனரசு கூறியதாவது:-

    பொது இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர் அறிவிப்பு பலகைகளில் தமிழில் பெயர் எழுதப்பட வேண்டும் என்று 1956-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பாளை பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய அறிவுசார் பூங்கா, பாளை வ.உ.சி.விளையாட்டு திடல் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முதல் இடம் அளிக்கப்படவில்லை.

    இதனை வலியுறுத்தி கடந்த ஆண்டு மட்டும் 7 முறை மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளோம்.

    இதற்கு முன்பு 2 முறை போராட்டங்களை அறிவித்தும், தேவையான கால அவகாசங்களை வழங்கியும் தொடர்ந்து எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற பட்டினி போராட்டத்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது

    போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் என்று திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #dmk #karunanidhi
    சென்னை:

    விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும். அறக்கட்டளை மூலம் குடிமைப்பணி பயிற்சி மையமும் நடத்தப்படும். நோயாளிகள் சிகிச்சை பெற அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கப்படும். 

     மத்திய பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா?  என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். கருணாநிதி மகன் சாதித்தான் என்பதை நிரூபிக்க வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #dmk #karunanidhi
    ×