search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செடிகள்"

    • கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
    • மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னத் துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் (மா, கொய்யா, எலுமிச்சை), காய்கறி நாற்றுகள் (தக்காளி, மிளகாய், கத்தரி), விதைகள் (வெண்டை, வெங்காயம்), மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    மேலும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு இயற்கை உரமும், வாழை மற்றும் பல்லாண்டு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் ஊடுபயிராக சாகுபடி செய்திட விதைகள் மற்றும் உயிர் உரங்களும் மானி யத்தில் வழங்கப்பட உள்ளது.

    வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்திட ஒரு மெட்ரிக் டன் கொள்ளளவுக்கு ரூ.3 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயி அல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினரை அணுகி பயன் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.
    • ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனை தடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நகரின் மையமாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் ஓடம் போக்குவரத்து இருந்ததால் இதனை ஓடம்போக்கி ஆறு என்று அழைத்ததாக கூறுகின்றனர்.

    இந்த ஆற்றின் மூலம் திருவாரூர் நகரம், விளமல், வன்மீகபுரம், தியானபுரம், சாப்பாவூர், கடாரம்கொண்டான், அலிவலம், கீவளூர் ஆகிய இடங்களில் பாசன வசதிகளும் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து இருப்பது நீரின் போக்கை மாற்றுகிறது.

    மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலந்து விடுகிறது. இதனால் இந்த ஆற்றின் தண்ணீர் தெளிவற்ற நிலையில் கருமை நிறமாக காட்சியளிக்கிறது.

    மேலும் இந்த ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நீரோட்டத்தையே காண முடியாத அளவுக்கு உள்ளது.

    இதனால் நீரின் தூய்மை மாறுவதோடு, ஆற்று நீரின் போக்கும் மாறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே இந்த ஆற்றில் தெளிந்த நீரோட்டம் இருக்கும் வகையில் செய்திட வேண்டும்.

    அதற்கேற்ற வகையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

    ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வழித்தடங்களை கண்டறிந்து அதனையும் தடுத்து, அப்புறப்படுத்த வேண்டும்.

    இதன் மூலம் ஆற்றில் தெளிவான நீரோட்டத்தை ஏற்படுத்தி நகரின் அழகை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது.
    • இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர்நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:-

    மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. ஆறு, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இந்த செடிகளை முற்றிலும் அகற்றி அதனை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழச்செடிகள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்

    திட்டத்தின் கீழ் இருக்கூர்,

    குன்னத்தூர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், வட

    கரையாத்தூர், சிறு நல்லிக்கோவில், சுள்ளிபா

    ளையம், குப்பிரிக்காபா ளையம் ஆகிய கிராமங்க ளுக்கு பழப்பயிர் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு மா, கொய்யா மற்றும் எலுமிச்சை செடிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து தோட்டக்கலை துறையின் மூலம் பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வட்டார

    தோட்டக்கலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 

    • மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் உள்ளிட்ட செடிகள்.
    • மூலிகை வனத்தில் பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கபட்டது. இந்த மூலிகை வனம் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த மூலிகை தோட்டத்தில் மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் செடிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டு செடிகள் முன்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூலிகை வனத்தில் தற்போது பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில், நேற்று வேதாரண்யம் வருகை தந்த கலெக்டர் அருண் தம்புராஜ் மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மூலிகை செடிகள் செழித்து வளர்ந்திருப்பதை கண்டு அதிகாரிகளை பாராட்டினார்.

    இது போல் மூலிகை வனம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது, தாசில்தார் ஜெயசீலன், துணை வட்டாட்சியர் வேதையன் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர்.

    • ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.
    • பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதான மங்கள வாய்க்கால் அமைந்துள்ளது.

    முள்ளியாற்றில் பிரிந்து கட்டிமேடு முதல் ஆதிரெங்கம் வரை 7-கிமீ தூரம் கொண்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் புதர்போல் மண்டி கிடக்கிறது.

    தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீர் வடிய வழியின்றி வாய்க்காலின் கரைகளை தாண்டி செல்லும் நிலை உள்ளது.

    இதுகுறித்து, விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரனிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, செடிகளை எந்திரம் கொண்டு அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பணியின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன்,துணைத்தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், ஊராட்சி செயலாளர் இளந்திரையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மூலிகை செடிகள் நடும் விழா நடைபெற்றது.
    • தோட்டக்கலை சார்பில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்ட தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில், அரசு கலைக் கல்லுாரி பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி வளாகத்தில், மூலிகை செடிகள் நடும் விழா நடந்தது. இதில், தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூலிகை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் பழவகை செடிகள் நடும் பணியை, பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அலுவலர் சந்தியா தொடங்கி வைத்தார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வி, தோட்டக்கலை பயிர்களின் முக்கியத்துவம் பற்றி, மாணவியர் களிடம் விளக்கமளித்து பேசினார். விழாவில், கரூர் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர் செல்வகுமார், மாணவியர் விடுதி காப்பாளர் ஹேமா, உதவி தோட்டக்கலை அலுவலர் வீரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் முன்பு செடி கொடிகளுக்கு இடையே 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து கஞ்சா செடியையும், கஞ்சா பொட்டலத்தையும் கைப்பற்றிய போலீசார் கண்டன்விளையைச் சேர்ந்த அஜெய்மைக்கிள் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல், அக். 13-

    இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமை யிலான போலீசார் கண்டன் விளை சென்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் முன்பு செடி கொடிகளுக்கு இடையே 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடியையும், கஞ்சா பொட்டலத்தையும் கைப்பற்றிய போலீசார் கண்டன்விளையைச் சேர்ந்த அஜெய்மைக்கிள் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.
    • அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலக வளாகத்தில் 76 வகையான மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது

    விழாவில் கோட்டாட்சியர்பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் வேதையன் வரவேற்றார்.விழாவில் அலுவலக வளாகத்தில் வல்லாரை, கருசலங்கண்ணி சித்தரத்தை, மலைவேம்பு, மின்னல் கீரை, நித்திய கல்யாணிமருதோன்றி உட்பட 76 வகையான மூலிகை செடிகளையும், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நட்டும், மூலிகைகளின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகள், பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகளையும் வழங்கினார்

    பின்பு 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற நகல், குடும்ப அட்டையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கமலா அன்பழகன், ஊராட்சி ஒன்றியஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரமன்றதலைவர் புகழேந்தி, மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார்மூ லிகை பண்ணையாளர் புஷ்பவனம்ஹரிகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.விழா முடிவில்துணை தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.

    வழக்கமாக தாசில்தார் அலுவலகங்களில் பெயரளவிற்கு புங்கை உள்பட ஒரு சில மரங்கள் நடப்படுவது வழக்கம் மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரும்போது சிறு செடிகளை நடுவார்கள் அதன் பிறகு அதையாரும் கண்டுகொள்ளமாட்டர்கள் மீண்டும் அதிகாரிகள் வரும்போது அதே இடத்தில் மீண்டும் மரம் நடும் விழா நடைபெறுவது அனைத்து அலுவலகத்திலும் நடைபெறுவது வழக்கம்

    ஆனால் அதற்கு நேர்மாறாக இவ் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்

    இந்த மூலிகை தோட்டத்தை அலுவலகம் வரும் பொதுமக்கள் பார்த்து வியந்து பாராட்டி செல்கின்றனர் தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.

    மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் மூலிகை செடியின் பயன்பாட்டை அறிந்து அதனை தங்களின் வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு செயல்பட துணை வட்டாட்சியரின் செயலை ஒவ்வொரு அலுவலகத்தில் பின்பற்றினால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சென்றால்நோயற்ற வாழ்வை நோக்கிச் .தமிழகம்செல்லும் என்பதில் ஆச்சரியமில்லை.

    ×