

இரணியல், அக். 13-
இரணியல் அருகே கண்டன்விளையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமை யிலான போலீசார் கண்டன் விளை சென்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் வீட்டின் முன்பு செடி கொடிகளுக்கு இடையே 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடியையும், கஞ்சா பொட்டலத்தையும் கைப்பற்றிய போலீசார் கண்டன்விளையைச் சேர்ந்த அஜெய்மைக்கிள் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.