search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு கூட்டம்"

    • சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா?

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது.

    இந்த மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

    சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலையே சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதே மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முன்மொழிந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனுக்குடன் ஒப்புதல் கொடுக்காமல் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    கவர்னர் ரவி வசம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

    இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அதில் அவர் "அனுமதி இல்லை" என்று மட்டும் ஒற்றை வரியில் குறிப்பிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒப்புதல் அளிக்காததற்கான காரணத்தை கவர்னர் விரிவாக தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து தமிழக அரசும் பதிலடி நடவடிக்கையை மேற்கொள்ள நேற்று முன்தினம் தீர்மானித்தது. அதன்படி கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

    10 மசோதாக்களை மீண்டும் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்காக 18-ம் தேதி (இன்று) தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்தது.

    முதலில் மறைந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பங்காரு அடிகளார், சங்கரய்யா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:

    பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 2 சட்ட முன்வடிவுகள், பதினாறாவது சட்ட மன்றப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட 8 சட்ட முன்வடிவுகள் கவர்னரின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நெடுநாட்கள் நிலுவையில் வைத்திருந்து கடந்த 13.11.2023 அன்று எவ்வித காரணமும் குறிப்பிடாமல், ஏற்பிசை அளிப்பதை நிறுத்திவைப்பதாக சட்ட முன்வடிவுகளில் குறிப்பிட்டு கவர்னர் அச்சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் கவர்னர் ஏற்பிசை அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்து சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பியுள்ளது ஏற்புடையதல்ல என இப்பேரவை கருதுகிறது.

    இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன் வரம்புரையின் கீழ் மேற்காணும் சட்டமுன் வடிவுகள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், கவர்னர் அதற்கு ஏற்பிசைவு அளித்திடவேண்டும் என்பதை அவை கவனத்தில் கொள்கிறது.

    ஏற்கனவே பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் 8.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 9.1.20 20-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2020-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்ட முன்வடிவு.

    9.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமுன்வடிவு ஆகியவற்றுடன் பதினாறாவது சட்டமன்றப் பேரவையில், 25.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு

    5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு.

    9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 10.5.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்ட முன்வடிவு.

    10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு.

    18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 19.10.2022-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்ட முன்வடிவு.

    19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்ட முன்வடிவு.

    19.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு 21.4.2023-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் 20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023-ம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்ட முன்வடிவு ஆகிய சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 143-ன் கீழ் இப்பேரவை மறுஆய்வு செய்திட இம்மாமன்றம் தீர்மானிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 10 மசோதாக்களை அப்படியே மீண்டும் நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதன்மீது அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துப் பேசினார்கள்.

    அதைத் தொடர்ந்து கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்டமசோதாக்களையும் சட்டசபையில் மறுஆய்வு செய்ய தாக்கல் செய்யுமாறு அமைச்சர்களை சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகிய 6 அமைச்சர்கள் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மசோதாக்களை தனித்தனியாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். அதன்படி 10 மசோதாக்கள் மீண்டும் இன்று நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இன்றைய சபை நிகழ்ச்சிகள் முடிவடைந்தது.

    சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலையே சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என தெரிகிறது.

    சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதே மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

    • முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • தனித்தீர்மானம் மீது பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்து வருகிறது. இதில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

    அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். 10 சட்ட முன்வடிவுகளையும் ஆளுநர் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக கருதுகிறேன்.  மேலும், ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் சுப்ரீம் கோர்ட்டை அரசு நாடியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருவதற்குள் ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்டவேண்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும்.

    அவசர, அவசரமாக ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    • சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முன்மொழிந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை முன்மொழிந்தார்.

    அந்த மசோதாக்களின் விவரம் வருமாறு:

    சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா

    தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் திருத்த மசோதா

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    அண்ணா பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா

    தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா

    • தமிழக கவர்னர் அவசர அவசரமாக 10 சட்ட மசோதாக்களை எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.
    • தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்த சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது:

    எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலனே முக்கியம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை.

    தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி.

    ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அவசர அவசரமாக இந்த சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார்.

    இந்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது.
    • மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

    தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, வெங்கடசாமி, பா.வேல்துரை ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

    அதன்பிறகு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    இதைத் தொடர்ந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.

    • வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது.
    • பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

    காரிமங்கலம்,

    காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைவாணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய தொழில் ஊக்குவிப்பாளர் வெங்கடே ஸ்வரி, மாவட்ட வள அலுவலர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் அவர்கள் பேசுகையில், காரிமங்கலம் ஊராட்சி ஓன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளை சேர்ந்த முதல் தலை முறை தொழில் முனைவோர்களுக்கு சிறப்புத் திட்டம் குறித்தும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

    மேலும் இந்த மூன்று திட்டங்களுக்கான கல்வித் தகுதி, வயது, திட்ட மதிப்பீடு, சொந்த முதலீடு, மானிய விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஆய்வுக் கூட்டத்தில் 30 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிந்து மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் சுயதொழில் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அலுவலக கைபேசி எண்கள் 89255 33941 மற்றும் 04342-230892 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர், ஊராட்சி செயலாளர்கள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
    • ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நியமன குழு, வேளாண்மை உற்பத்தியாளர் குழு, கல்வி குழு, பொதுநோக்க குழு அமைக்கப்பட்டு அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மின்வாரிய ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது
    • புகார்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்

    கரூர்:

    கரூரில் மின்வாரிய ஊழியர்ளுக்கான சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் மின் பகிர்மான வட்டத்தில் கரூர் நகரிய கோட்டத்தில் செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் தலைமையில், மின்வாரிய ஊழியர்களுக்கான சிறப்புக்கூட்டம் தாந்தோணிமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், வாட்ஸ்அப், டிவிட்டர் செயலி, மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து மின்துறை சார்ந்த அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். மின் வாரியத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து விரிவாக்கப் பணிகளை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் பார்வைககு எடுத்து சென்று வாரியத்தின் நற்பெயரை காக்கவேண்டும். விபத்தில்லாமல் பணி செய்ய கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் மின்வாரிய ஊழியர்கள் 214 பேர் கலந்து கொண்டனர். மேலும் கோட்ட அளவில் பாதுகாப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

    • நாகர்கோவில் தென்குமரி நாட்டுப்புற கலைஞர்கள் கழகத்தின் சிறப்பு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • பேராசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். பேராசிரியர் கலையரசு, சிலம்பக் கலைஞர் சிலம்பொலி ஜெயராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தென்குமரி நாட்டுப்புற கலைஞர்கள் கழகத்தின் சிறப்பு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

    பேராசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். பேராசிரியர் கலையரசு, சிலம்பக் கலைஞர் சிலம்பொலி ஜெயராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி நடத்தும் ஊரார்கள் கலை ஞர்களுக்கு தங்கும் இடமும், உணவும் நல்ல முறையில் கொடுக்கப்பட வேண்டும், கிராமிய கலை ஞர்களை வரன் முறைப் படுத்தப்பட்ட கலையின் கலைஞர்களை போல் நடத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்களை கலைஞர்கள் சங்க தலைவர் தங்கமணி வாசித்தார்.

    முன்னதாக இசை ஆசிரியர் கிருஷ்ணன் இறைவணக்கம் பாட, வில்லிசைக் கலைஞர் தர்மலிங்கம் வரவேற்றார். முடிவில் பரதநாட்டிய ஆசிரியை மெரினா மஜு நன்றி கூறினார்.

    ×