என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கயம் ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம்
- கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
- ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காங்கயம் :
காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நியமன குழு, வேளாண்மை உற்பத்தியாளர் குழு, கல்வி குழு, பொதுநோக்க குழு அமைக்கப்பட்டு அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






