search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச போட்டி"

    • கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
    • கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவிரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடை பெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார். பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்

    • இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் கோலிக்கு அது 500-வது சர்வதேச போட்டியாகும்.

    அவர் இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார். ஒட்டுமொத்தமாக 10-வது வீரராக உள்ளார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார். டோனி 538 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 509 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

    கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களில் கோலி 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் கோலிக்கு இந்நாள், முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.
    • டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார்.

    34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச போட்டியில் 500 விக்கெட்டை தொட்டார். 500 விக்கெட் வீழ்த்தி, 5 ஆயிரம் ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்தார். இத்தகைய சாதனை படைத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முதல் வீரர் கபில்தேவ் ஆவார்.

    ஜடேஜா 63 டெஸ்டில் 263 விக்கெட்டும், 171 ஒரு நாள் போட்டியில் 189 விக்கெட்டும், 64 இருபது ஓவர் ஆட்டத்தில் 51 விக்கெட்டும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 503 விக்கெட் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 2623 ரன்னும், ஒரு நாள் ஆட்டத்தில் 2447 ரன்னும், 20 ஓவரில் 457 ரன்னும் ஆக மொத்தம் சர்வதேச போட்டியில் 5527 ரன் எடுத்துள்ளார்.

    சர்வதேச போட்டிகளில் 500 விக்கெட் மற்றும் 5 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் விவரம்:-

    கபில்தேவ், ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஜேக் காலிஸ், போல்லாக் (தென் ஆப்பிரிக்கா), இம்ரான்கான், வாசிம் அக்ரம், அப்ரிடி (பாகிஸ்தான்), இயன் போத்தம் (இங்கிலாந்து), சமிந்தா வாஸ் (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூ சிலாந்து), ஷகீப் அல் ஹாசன் (வங்காளதேசம்).

    • சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது.
    • விஜய் மற்றும் எமிலி ஆகியோர் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.

    சாயர்புரம்:

    சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது. இதில் சாயர்புரம் கோல்டு ஸ்டார் சிலம்பாட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் சாயர்புரம் கூட்டுறவு சங்க தலைவர் புளியநகர் அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்மி ஆகியோரின் மகன் விஜய் மற்றும் க.சாயர்புரம் ஆறுமுகம், கவுசல்யா என்பவர்களது மகள் எமிலி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற 2 பேருக்கும் சாயர்புரம் மெயின் பஜாரில் பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கரேஸ்வரி ஏசுவடியான் கலந்து கொண்டு மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பயிற்சி அளித்த கோல்டு ஸ்டார் சிலம்ப மாஸ்டர் சண்முகசுந்தரம், மாஸ்டர் மணிகண்டன் ஆகியோரை கட்டாளங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏசுவடியான், சாயர்புரம் வட்டார நடைபயிற்சி குழு தலைவர் பிச்சைமுத்து மற்றும் பட்டுபுதியவேல், ராஜா, அசோக், பரமசிவம், தங் ராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் பாராட்டினார்.சாயர்புரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி நன்றி கூறினார்.

    ×