சர்வதேச சிலம்ப போட்டியில் சாயர்புரம் மாணவர்கள் 2 பேர் வெற்றி-சொந்த ஊரில் வரவேற்பு

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது.விஜய் மற்றும் எமிலி ஆகியோர் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ,மாணவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.
வெற்றி பெற்ற மாணவ,மாணவிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.
Published on

சாயர்புரம்:

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது. இதில் சாயர்புரம் கோல்டு ஸ்டார் சிலம்பாட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் சாயர்புரம் கூட்டுறவு சங்க தலைவர் புளியநகர் அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்மி ஆகியோரின் மகன் விஜய் மற்றும் க.சாயர்புரம் ஆறுமுகம், கவுசல்யா என்பவர்களது மகள் எமிலி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற 2 பேருக்கும் சாயர்புரம் மெயின் பஜாரில் பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கரேஸ்வரி ஏசுவடியான் கலந்து கொண்டு மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பயிற்சி அளித்த கோல்டு ஸ்டார் சிலம்ப மாஸ்டர் சண்முகசுந்தரம், மாஸ்டர் மணிகண்டன் ஆகியோரை கட்டாளங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏசுவடியான், சாயர்புரம் வட்டார நடைபயிற்சி குழு தலைவர் பிச்சைமுத்து மற்றும் பட்டுபுதியவேல், ராஜா, அசோக், பரமசிவம், தங் ராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் பாராட்டினார்.சாயர்புரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com