search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டத்தில்"

    • போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ட்ராஜ் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றிய இவர், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் டிஸ்மிஸ் செய்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு, நகைபறிப்பு போன்ற வற்றில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை, அடிதடி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக இவர் மீது தக்கலை, திருவட்டார், மார்த்தாண்டம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது இவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதனை சாலையில் விட்டுச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மார்த்தாண்டம் திக்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மெர்லின்ட்ராஜை கைது செய்தனர். வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இதனால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து மெர்லின்ட்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • டி.எஸ்.பி. மகேஷ்குமார் எச்சரிக்கை
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி.எஸ்.பி. மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:- அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. இதனால் ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
    • இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் எருமாபாளையம் சன்னியாசிகுண்டு பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் நிர்மல் தாஸ் (வயது 22). இவர் கடந்த மாதம் 2-ந் தேதி சீலநாயக்கன்பட்டி இரட்டை கோவில் அருகே கொத்தனார் மூர்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதா னப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மல் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது ஏற்கனவே கிச்சிப் பாளையம், கொண்ட லாம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பி டத்தக்கது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று நிர்மல் தாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

    • சேலம் தாதகாப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பிரபல ரவுடி கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.
    • இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் 5-வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பால்ராஜ் (வயது 27). இவர் கடந்த 8-ந் தேதி மூலப்பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதேஷ் (26), கத்தி முனையில் பால்ராஜ் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்துக் கொண்டார்.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மாதேசை பிடிக்க முயன்றபோது கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம் லைன்மேடு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). கார் டிரைவரான இவர், கடந்த 10-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தாதகப்பட்டி மேட்டு தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவரை வழிமறித்த, தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிச்ச கார்த்தி (24), கத்தியை காட்சி மிரட்டி மணியிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, ரூ.2175 பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல், சேலம் லைன்மேடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (54). இவர் கடந்த 6-ந் தேதி சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஜய் (36), கத்தி முனையில் மிரட்டி சீனிவாசனிடம் இருந்து 2 1/4 பவுன் சங்கிலி மற்றும் ரூ.4,300 பறித்துக் கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    குண்டர் சட்டம்

    கைது செய்யப்பட்ட ரவுடிகள் 3 பேரும், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன் பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா, ரவுடிகள் பிச்ச கார்த்தி, மாதேஷ், விஜய் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    • சேலத்தை கலக்கிய பிரபல வழிப்பறி திருடர்கள்- லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
    • மேற்கண்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ெபரியகொல்லப்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் கோகுல்நாத் என்கிற கோகுல் (வயது 29). கடந்த 2021-ம் ஆண்டு கன்னங்குறிச்சி பகுதியில் வைத்து சின்னத்திருப்பதி பாரதிநகரை சேர்ந்த ராஜ மகேந்திரன் மற்றும் சேவிகவுண்டர் தெருவை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரிடம் பணம் வழிப்பறி செய்தார். இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ரகுமான் என்பவரை கட்டையால் தாக்கிய அவர், கொண்டப்ப–நாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.

    இதேபோல் சேலம் முள்ளுவாடிகேட் மக்கான் தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 35). இவர் கடந்த 2020-ம் ஆண்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் இருந்து செல்போன் பறித்து சென்றார். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி சேலம் புதிய பஸ் நிலையத்தில் ெஜயபால் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் திருடினார். அதே மாதம் 30-ந்தேதி இட்டேரி சுடுகாடு அருகே நடந்து சென்ற ராஜா என்பவரை ஜாபர் அலி கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்திமுனையில் பணம் வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜாபர் அலியை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்: சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாபிள்ளைக்காடு 4-வது கிராஸ் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). கடந்த 2020-ம் ஆண்டு கார்த்திக் எடப்பாடி க.புதூர் மேற்கு தெருவில் ஒரு வீட்டுக்குள் புகுந்து பிரோவில் இருந்த தங்க தோடு, வெள்ளி கிண்ணம், பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடினார். தொடர்ந்து அவர், கடந்த ஜூன் மாதம் 15, 16-ந்தேதிகளில் எருமாபாளையம் செல்லக்குட்டிக்காட்டை சேர்ந்த கேசவன் மற்றும் சன்னியாசிகுண்டு அர்ஜுனர் காலனிைய சேர்ந்த பரணி செல்வம் ஆகியோரை வழிமறித்து கத்திமுனையில் பணம், செல்போன், தங்க செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    அதுபோல் சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணத்து தெருவை சேர்ந்தவவர் பாலமுருகன் (வயது 45). கடந்த 2021-ம் ஆண்டு இவர் அம்மாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி, வெளிமாநில லாட்டரி சீட்டு என்ற பெயரில் வெள்ளை துண்டு சீட்டில் போலியாக நம்பர் எழுதி மோசடியில் ஈடுபட்டார். இது பற்றி தட்டிக்கேட்ட ரங்கநாதன் என்பவரை திட்டி கத்தியால் குத்தினார். இதை தடுக்க வந்த ெபாதுமக்களை பாலமுருகன் கத்தியை காட்டி மிரட்டினார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    சேலம் மத்திய ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ள கோகுல்நாத், ஜாபர் அலி, கார்த்திக், பால முருகன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர், மேற்கண்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவு ஆணை சேலம் மத்திய சிறையில் வழங்கப்பட்டது.

    • சேலம் கிச்சிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலில் 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அதனை பதுக்கி வைத்தும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டனர் .மேலும் அதனை பதுக்கி வைத்தும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவர்கள் 2 பேரையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் மலர்விழி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்தார்.
    • சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    சிவகிரி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (28). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    மாணவியின் பெற்றோர் சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    ×