ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் கிச்சிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலில் 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.மேலும் அதனை பதுக்கி வைத்தும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
ரேஷன் அரிசி கடத்திய 2  பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

சேலம்:

சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டனர் .மேலும் அதனை பதுக்கி வைத்தும் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் அவர்கள் 2 பேரையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் மலர்விழி குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com