search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரம் போட்டி"

    • . 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசு
    • 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர்.

    மார்த்தாண்டம் :

    தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்குட்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி குலசேகரத்தில் நடைபெற்றது.

    இதில் மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் பியோனா, ஓவியா முதல் பரிசையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரணா, அர்சித் ரிஸ்வான் இரண்டாம் பரிசையும், 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஸ்டெனி முதல் பரிசையும் வென்றனர். 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி ஹேசல் மெர்சியா முதல் பரிசையும், இரட்டையர் பிரிவில் ஹேசல் மெர்சியா-விஸ்மிகா முதல் பரிசையும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரிஜோ முதல் பரிசையும், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஸ்மின் லிஜா, 2-வது பரிசையும் பெற்றுள்ளனர். புள்ளிகள் அடிப்படையில் 2-ம் இடத்தை பெற்று சுழற்கேடயத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கலாசன், இணை தாளாளர் பிரான்ஸிஸ், பள்ளி முதல்வர் ஷீலா குமரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.

    • மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

    தருமபுரி மாவட்ட அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில ்ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் மற்றும் சதுரங்க போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    வயது வரம்பு அடிப்படையில் நடைபெற்ற கேரம் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் இரட்டையர் பிரிவில் கவிசரண்மற்றும் சரன்பாபு முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் கவிசரண் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் செங் கொடி 2-ம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் சச்சின் தாசன் 2-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர் களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், மற்றும் ஆனந்த– குமார் ஆகியோரை பள் ளியின் தாளாளர் முரு கேசன், செயலாளர் பிரு ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட் டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • க.முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) குலாலர் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
    • மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாணவர் அணி சார்பில் க.முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) குலாலர் திருமண மண்டபத்தில் தொடங்கியது. மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கிவைத்தார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சிவபாலன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

    இன்று மாலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    • கேரம் போட்டி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாணவர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்களுக்கான ஒற்றையர் கேரம் போட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூர் லட்சுமிநகர் குலாலர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்குகிறார். போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். மேயர் தினேஷ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் பங்கேற்கிறார்கள். முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    • மாநில அளவிலான கேரம் போட்டிக்கு கரூர் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • மாணவிகள் மகாலட்சுமி, ஹர்ஷினிபிரியா ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான கேரம் போட் டிக்கு தகுதி பெற்றனர்.

    கரூர்

    மாநில அளவிலான கேரம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கரூரில், வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நி லைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி, 8ம் வகுப்பு மாணவி ஹர்ஷினிபிரியா ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான கேரம் போட் டிக்கு தகுதி பெற்றனர். மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், உதவி தலை மையாசிரியர் ரமேஷ், உடற்கல்வியாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • 1 முதல் ஐந்தாவது வகுப்பு வரை படிப்பவர்கள் இளநிலை பிரிவிலும், 6 முதல்12-வது வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் கலந்து கொள்ளலாம்.
    • சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வரும் 12-ந் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டங்கத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் 1-வது வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர் இளநிலை பிரிவிலும், 6-வது வகுப்பிலிருந்து 12-வது வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் கலந்து கொள்ளலாம்.

    போட்டிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும் நடைபெறும். இளநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.500, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.125 மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250 வீதமும், ரொக் கப்பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    மேலும் முதுநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500, மூன்றாம் இடம் பெறுபவர் களுக்கு ரூ. 250 மற்றும் இரட் டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், ரொக்கப் பரிசுத் தொகையும் சான்றிதலும் வழங்கப்படும்.

    போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் https:// www.tnsports.org.in என்ற இணையதளத்தில் District Level Carrom Competition என்பதனை சொடுக்கி (கிளிக்செய்து) தங்களுடைய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் புகைப்படம். கையொப்பம் மற்றும் படிக்கும் பள்ளியிலிருந்து உண்மைச் சான்றிதழினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு 04652 262060 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அள விலான போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுபவர்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×