மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
கேரம் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர்  பிருஆனந்த்பிரகாஷ் ஆகியோர் பாராட்டிய காட்சி.
கேரம் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த்பிரகாஷ் ஆகியோர் பாராட்டிய காட்சி.
Published on

தருமபுரி மாவட்ட அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில ்ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் மற்றும் சதுரங்க போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வயது வரம்பு அடிப்படையில் நடைபெற்ற கேரம் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் இரட்டையர் பிரிவில் கவிசரண்மற்றும் சரன்பாபு முதலிடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் கவிசரண் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் செங் கொடி 2-ம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒற்றையர் பிரிவில் சச்சின் தாசன் 2-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர் களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், மற்றும் ஆனந்த– குமார் ஆகியோரை பள் ளியின் தாளாளர் முரு கேசன், செயலாளர் பிரு ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட் டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com