என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓஎன்ஜிசி"

    • வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    • பிணையில் வெளிவருகிறார் பி.ஆர்.பாண்டியன்.

    பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    கடந்த 2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஓஎன்ஜிசி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கில் இம்மாத தொடக்கத்தில் திருவாரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் பி.ஆர். பாண்டியன் மீதான தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதை அடுத்து பிணையில் வெளிவருகிறார்.







    • சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
    • காந்திநகர் பகுதி மக்கள் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது.

    இந்நிலையில், சேத்திரபாலபுரம் காந்திநகர் கீழகாலனி பகுதியில் வயல்வெளி பகுதியில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு குழாயில் லேசான வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் என கிராம மக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் உடனடியாக சரி செய்யாததை கண்டித்து காந்திநகர் பகுதி மக்கள் 30-க்கு மேற்பட்டோர் கும்பகோணம்-மயிலாடுதுறை பிரதான சாலையில் சேத்திரபாலபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனிடையே ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் அப்பகுதியை ஆய்வு செய்து அவ்வழியாக செல்லும் கேஸ் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். 

    • இந்த போட்டி உலகில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் தொடர்ந்து பயந்ததாகக் கூறப்படுகிறது.
    • ​​கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.

    ஆந்திரப் பிரதேசத்தில் மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) ஊழியராக இருந்தவர் 37 வயதான சந்திர கிஷோர். இவருக்கு ஏழு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அவர்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்றார்.

    இதன் பின்னர் அவர் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி அறைக்கதவை திறந்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்திர கிஷோர் தனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றும், இந்த போட்டி உலகில் பின்தங்கிவிடுவார்கள் என்றும் தொடர்ந்து பயந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த மன அழுத்தத்தால், அவர் இவ்வளவு இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

    மன்னார்குடி:

    தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்தி வந்தது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி, பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது. இதில் ஒரு கிணற்றில் கடந்த 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கியாஸ் வெளியேறியது.

    இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டது.

    இந்நிலையில் பெரியக்குடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்று காலை திடீரென அதிகளவில் கியாஸ் கசிந்தது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியது. அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அதிகளவில் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியதால் கிராமமக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.

    எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் ஆயில் மற்றும் கியாஸ் எதுவும் வெளியாக வில்லை எனவும் காற்று மட்டுமே வருகிறதாகவும் தெரிவித்தனர்.

    மேலும், இதனை இன்னும் 2 நாட்களில் நிறுத்தி விடுவோம் என தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல.
    • தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஓஎன்ஜிசி-யின் செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டும்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு எனது தலைமையிலான கடந்த அம்மா அரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.

    இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல.

    இன்றைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அவர்களது முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்துபார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக்கூறிய வரலாறு உண்டு. ஆகவே கடந்த காலத்தை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ள கூடாதெனவும், தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஓஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமெனவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

    ×