search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்திகை நிகழ்ச்சி"

    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
    • சோழவந்தான் அருகே தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினர் இதில் கிராம மக்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் நிலையை எழுத்தர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

    • கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் தில் பள்ளிக் கல்வித்துறை, நில அளவைத்துறை, பத்தி ரப்பதிவுத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துறை யின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தகுதி யான பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வரு வாய்த்துறை யை சேர்ந்த கிராம நிர்வாக அலு வலர்கள், வருவாய் அலுவலர்கள், துணை தாசில்தார்கள், தாசில்தார்கள், உள்ளிட்டோர் பொது மக்களிடமிருந்து தங்களுக்கு வரும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இயற்கை இடற்பாடுகள், மீனவர் பிரச்சனை அதிகமாக உள்ளது. அனைத்து அலு வலர்களும் தங்களுடைய ஆளுமைக்குட்பட்ட பகுதிக ளிலுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருவாய் துறை அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மீட்புபணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்பட்டது.

    பேரிடர் காலங்களில் செயல்படுத்தப்படும் மீட்புபணிகள் குறித்தும், தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், விபத்திலிருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொள்வது என்பது தொடர்பாகவும் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

    தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரி டர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    குறிப்பாக கட்டிடம் மற்றும் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மீட்டல், நைலான் வலை மூலம் மீட்டல், சிறப்பு தளவாடங் கள் மற்றும் மீட்பு உப கரணங்கள் செயல்முறை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது. இதனை கூடுதல் தலைமை செயலா ளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிர மணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை.
    • மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒத்திகை.

    சென்னை தி.நகர் பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும்விதமாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் ஒரு பகுதியாக, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒத்திகை நடந்தது.

    இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமுடன் கண்டனர்.

    • கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரியில் கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடர் மீட்பு, வெள்ளதடுப்பு குறித்து பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழச்சி நடந்தது. கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பருவமழை, பேரிடர் காலங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நீர் நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தத்ரூபமாக தீயணைப்பு மற்றும் மீட்புபணி வீரர்கள், நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் செய்து காண்பித்தனர். இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் உத்தரவின்படி சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் கவுந்தர்ராஜன், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தண்ணீர் திறந்து விடாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் செல்வமணி தலைமையில், தாசில்தார் சுப்பிரமணி முன்னிலையில் தீயணைப்பு மீட்பு குழுவினருடன், வாணியாறு அணையில் தீயணைப்பு மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டு உயிருக்கு போராடுபவர்களையும், தவறி அணையில் விழு பவர்களையும், மழை காலத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடுபவர்களையும் உயிருடன் மீட்டு காப்பாற்றுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் பொது பணித்துறையினருக்கும்,மீனவர்களுக்கும் விழிப்புணர்வு மீட்பு பணியாளர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் உதவி பொறியாளர் கிருபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் பருவ மழை நல்ல முறையில் பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் தருவாயில் இருந்து வருகின்றன.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியார் நீர்த்தேக்கம் 1985-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் கட்டப்பட்டது.

    இந்த அணையால் இப்பகுதியில் உள்ள வாழை, தென்னை, பாக்கு, கரும்பு, நெல், மரவள்ளி கிழங்கு, மஞ்சள் என ஏனைய பணபயிர்கள், நிலப்பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த அணையில் இருந்து இடதுபுற கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டால் மோளையானூர், வெங்கட சமுத்திரம், தேவராஜ பாளையம்,மெணசி, ஆலாபுரம், பூத நத்தம், தென்கரைக்கோட்டை , ஜம்மனஹள்ளிபோன்ற பகுதிகளில் 4050 ஏக்கர் நிலப்பரப்பிற்கும், வலது புற கால்வாய் வழியாக மோளை யானூர், கோழிமூக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஆலாபுரம், அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, தாதம் பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி பகுதிகளில் 4500 ஏக்கர் நிலப்பகுதிகளுக்கும், புதிய ஆயக்காடு, பழைய ஆயக்காடு என மொத்தம் 10, 517 ஏக்கர் நிலப்பகுதிகளுக்கு இந்த வாணியாறு நீர் தேக்கம் மூலமாக மூலமாக பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் இப்பகுதியில் உள்ள ஏரிகளில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், இந்த அணைக்கட்டு பெருமளவு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த அணை கடந்த ஒன்றரை மாத காலமாக நிரம்பிய நிலையிலேயே இருந்து வருகிறது.

    மொத்தம் 65 அடி உயரம் உள்ள அணை பகுதியில் தற்போது 63 அரை அடி உயரம் நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு 40 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் வலது புற கால்வாய் வழியாக ஆற்றில் 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    பருவமழை நல்ல நிலையில் பெய்து வருவதால் ஏற்கனவே வயல்வெளி யிலும், கிணறுகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளதால், பாசனத்திற்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை வைகை ஆற்றில் பேரிடர் மீட்பு குழு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • மதுரை மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் கண்மாய், சரவண பொய்கை ஆகிய பகுதிகளிலும் நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் கொள்ளளவு 71 அடி ஆகும். இதில் 70 அடிவரை தண்ணீர் நிரம்பி உள்ளது.

    வைகை அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் வைகை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், உபகரணங்களுடன் இன்று காலை மதுரைக்கு வந்தனர். அவர்கள் அரசினர் மீனாட்சி கல்லூரி அருகில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் ஒத்திகை நடத்தினர்.அவர்களுடன் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அதிகாரிகளும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பேரிடர் தயார் நிலை, வெள்ளத்தை எதிர்கொள்ளுதல், பாதிக்கப்பட்டோருக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தசைக்கட்டு காயங்கள், அடிப்படை உயிர் காக்கும் மருத்துவ சேவை, நோயாளிகளை தூக்குதல் -நகர்த்துதல், கயிறு மூலம் மீட்பு நடவடிக்கை, அவசர கால தயார் நிலை, ஆற்று வெள்ளத்தில் சிக்கியோருக்கு முதல் உதவி சிகிச்சை கொடுப்பது, மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது ஆகியவை செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப் பட்டது.

    மதுரை மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் கண்மாய், சரவண பொய்கை ஆகிய பகுதிகளிலும் பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது.

    ×