search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலும்பு கூடு"

    • சோழவரம் போலீசார் வழக்குபதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்தனர்.
    • கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). இவரை அதே பகுதி சோழபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி என்பவர் ஓரினசேர்கைக்கு அழைத்து சென்று அப்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்தார். அவரது உடலை கேசவ மூர்த்தி தனது வீட்டில் புதைத்தார். போலீசார் அசோக்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு தோண்டும் போது மற்றொரு மனித தாடை எலும்பு கூடு சிக்கியது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷித்ராவத் தலைமையில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் முன்னிலையில் இன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர். இதனால் இந்த கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    • தனுஷ்கோடி கடற்கரையில் எலும்புக்கூடாக கிடந்த பெண் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மேலும் இது தொடர்பான உண்மை நிலையை அறிவதற்காக பெண் எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் ஒரு மனித எலும்புக்கூடு கிடப்பதாக தனுஷ்கோடி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது.

    அந்த எலும்புக்கூடு எந்த பெண்ணின் எலும்புக்கூடு? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் எப்படி இறந்தார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பான உண்மை நிலையை அறிவதற்காக பெண் எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பெண்கள் யாரேனும் மாயமாகி உள்ளார்களா? யாரேனும் கடலில் குளித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    • மண்டை ஓடு மற்றும் மனித எலும்பு கூடு கிடந்தது.
    • கைகடிகாரம், வளையல்கள், கவரிங் சங்கிலி, துப்பட்டா போன்றவை கிடந்தன.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள எஸ்.அம்மாபாளையம் காப்பு காடு பகுதியில் சல்மடுவு ஓடை உள்ளது. இந்த பகுதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்பு கூடு கிடந்தது. அவ்வழியாக கண்காணிப்பு பணிக்கு சென்ற கோட்டப்பட்டி வனக்காப்பாளர் ராஜா இதை பார்த்து விட்டு அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அங்கு விரிந்து வந்தனர். இந்நிளியில் கோட்டப்பட்டி போலீசில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஞானசவுந்தரியா என்ற 17 வயது மாணவி காணாமல் போய் விட்டதாக அவரது தந்தை பெருமாள் என்பவர் புகார் செய்திருந்தார்.

    இதனால் பெருமாளை சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைத்தனர். எலும்பு கூடு கிடந்த இடத்தில் கைகடிகாரம், வளையல்கள், கவரிங் சங்கிலி, துப்பட்டா போன்றவை கிடந்தன.

    அதனை பார்த்த பெருமாள் இது தனது மகள் அணிந்திருந்த பொருட்கள் போலவே உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த பொருட்களை சேகரித்த போலீசார் எலும்பு கூடு மற்றும்மநடை ஓட்டை தடயவியல் சோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனையின் முடிவு வந்த பிறகே அந்த உடல் காணாமல் போன மாணவியுடையதா என்பது தெரிய வரும். காப்பு காடு பகுதியில் மனித எலும்பு கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 எலும்புக் கூடுகளையும் மரபணு சோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர்
    • மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கடந்த 2-ந் தேதி மனித எலும்புக்கூடு கிடந்ததை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கோட்டார் போலீசார் விரைந்து வந்து எலும்புக் கூட்டை மீட்டு விசாரணை நடத்தினர். எலும்பு கூடாக கிடந்தது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் கிடைக்காததால், அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை எடப்பாடு பகுதியில் கடலுக்கும் ஏ.வி.எம். கால்வாய்க்கும் இடையே தனியார் நிலத்தில் மற்றொரு எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கொல்லங்கோடு போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மழை நீர் வடித்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓடையில் தலையில்லாத எலும்புக் கூடு கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் இறந்தவர் ஆணா? பெண்ணா? யாரையாவது கொலை செய்து இங்கு வீசிச் சென்றார்களா? என பல கேள்விகள் எழுந்தன.

    மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் மாவட்டத்தில் மாயமானவர்களின் புகார்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் 2 எலும்புக் கூடுகளையும் மரபணு சோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர். அதன் முடிவுகள் சென்னையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் வர வேண்டி உள்ளது. அது கிடைத்த பிறகு, மாயமானவர்கள் பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தான் எலும்புக்கூடாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? தற்கொலை செய்தார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தார்களா? என்பது தெரியவரும்.

    • மாயமானவர்கள் பட்டியலை தயாரித்து போலீஸ் விசாரணை
    • எலும்புக்கூடு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.

    இவர் தற்போது பெங்களூரில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு தற்போது பாழடைந்து காணப்படுகிறது. இந்த கிணற்றில் எலும்புக்கூடு ஒன்று கிடந்ததை பார்த்த பொதுமக்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி கிணற்றில் கிடந்த எலும்புக்கூட்டை ஒரு சாக்கில் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் எலும்புக்கூடு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தப் பகுதியில் மர்மநபர் ஒருவர் கிணற்றின் மீது இருந்து மது அருந்தியதாகவும், அவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை என்றும் தெரிவித்தனர்.

    எனவே மது குடித்துக் கொண்டிருந்த மர்மநபர் தான் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.மேலும் அவரை யாராவது கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மாயமானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களது பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×