என் மலர்
நீங்கள் தேடியது "skeleton"
- கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.
- வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.
இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் இல்லை.
இதனால் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது.
இதனால் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷன் செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர்.
தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
- போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
- ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
குன்னம்:
பெரம்பலூர் அருகே வேப்பூர் ஏரியில் இருந்த மனித எலும்புக்கூட்டை எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் பெரிய ஏரி உள்ளது.
ஏரியில் தற்போது தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் சாக்கில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புக்கூடுகள் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சாக்கினை ஏரி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இழுத்துக் கொண்டு வந்தது.
இதைக்கண்ட ஊர் மக்கள் நாய்கள் இழுத்து கொண்டிருந்த சாக்கில் என்ன இருக்கின்றது என்று பார்த்தனர். அப்போது ஒரு மண்டை ஓடு, கை, கால்கள், எலும்பு துண்டுகள் மற்றும் முழுக்கை சட்டையுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து குன்னம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் உடன்டியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஏரியில் சாக்கில் இருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
ஏரியில் புதைந்து மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு சாக்கில் இருந்தது ஊர் மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்து ஏரியில் புதைத்து சென்றார்களா? அல்லது மாந்திரீ கத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? என சந்தேகிக்கின்றனர்
- நண்பர்கள் உதவியுடன் கிட்டார் வடிவமைக்கப்பட்டது.
- ஒரு உலோக கம்பியை எலும்புக்கூட்டில் முதுகெலும்பு பகுதியுடன் இணைத்து கிட்டார் வடிவமைத்தனர்.
புளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ். இவர் யூடியூப்பில் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது மாமா பிலிப் கடந்த 1996-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது எலும்பு கூடு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கல்வி நோக்கங்களுக்காக எலும்புகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால் அந்த எலும்பு கூட்டை திருப்பி அனுப்ப வேண்டியது இருந்தது. இதனால் பிரின்ஸ் தனது மாமா பிலிப்பின் எலும்பு கூட்டை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றார்.

பின்னர் அந்த எலும்பை வைத்து ஒரு கிட்டாரை வடிவமைக்க முடிவு செய்தார். அதன்படி நண்பர்கள் உதவியுடன் கிட்டார் வடிவமைக்கப்பட்டது. ஒரு உலோக கம்பியை எலும்புக்கூட்டில் முதுகெலும்பு பகுதியுடன் இணைத்து கிட்டார் வடிவமைத்தனர்.
இந்த எலும்பு கிட்டார் தனது மாமாவின் இனிய நினைவாக எப்போதும் செயல்படும் என்று பிரின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் இந்த கிட்டாரை வாசிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
- அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது.
இங்கு சாலை ஓரத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சாலை ஓரத்தில் மனித எலும்புக்கூடுகள் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவை கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து ஏராளமானோர் திரண்டு பயத்துடன் பார்வையிட்டு வந்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் மனித எலும்பா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட எலும்பு? என்பதனை பார்வையிட்டு சோதனை செய்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு இருந்த அனைத்து பொருட்களை சாக்கு முட்டையில் கட்டிக்கொண்டு விசாரணை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். மேலும் சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகம் பகுதியில் மந்திரிக்கப்பட்ட எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்ததால் யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.






