search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரக வளர்ச்சி துறை"

    • வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    பல்லடம் :

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, பல்லடம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரவி வரவேற்றார்.மாநிலத் தலைவர் ரமேஷ் கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சங்க பொருளாளர் ஜெயக்குமார், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநாட்டிற்கு சூளகிரி வட்டக்கிளைத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
    • இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டிற்கு சூளகிரி வட்டக்கிளைத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட்டச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள், ஜேம்ஸ் , டென்சிங், மூகிலன், தினேஷ், ஜெகதாம்பிகா, சியாமலா மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் முதல் விதிப்படி பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
    • இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முதல் விதிப்படி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி செய்யும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:

    ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறை க்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தி ஏற்க னவே 3 கட்ட போராட்டம் நடத்தினோம்.

    கூடுதல் கலெக்டர் பேச்சு வார்த்தை யை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் 5 அலுவலர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக சார்ஜ் வழங்கி உள்ளனர்.

    எனவே விதிப்படி வேலை என்று கோரிக்கை யை வலியுறுத்தி போராட்ட த்தை தொடங்கி உள்ளோம். வரும் 9-ந் தேதி வரை இந்த போராட்டம் மாவட்ட அளவில் நடைபெறும்.

    இதில் 732 பேர் ஈடுபடுகிறார்கள். பணி நேரத்துக்கு பின் நடக்கும் ஆய்வு கூட்டம், காணொளி கூட்டங்கள், கள ஆய்வுகளை தவிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும்.
    • 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பல்லடம் : 

    தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியது. இதே போல, கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள், மற்றும் உதவியாளர்கள் பணிக்கு வரவில்லை. கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • செப்டம்பர் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 23-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரகப் பகுதிகளில் பசுமையையும், தூய்மையையும் உருவாக்குகின்ற வகையில், இந்த மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு சுகாதார முகாமான "நம்ம ஊரு சூப்பரு'' திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள் பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை திட, திரவ கழிவு மேலாண்மை தொடர்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    செப்டம்பர் 3-ந்தேதி முதல் செப்டம்பர் 16-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும், செப்டம்பர் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 23-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,

    செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அனைத்து அரசு அலுவலர்களும் முழு அளவில் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும், திருச்சி மாவட்டத்தில் இச்சிறப்பு முகாமினை வெற்றிகரமாக செயல்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×