search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தூதர்"

    • இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார்.
    • இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    கொழும்பு:

    இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று அவர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

    மேலும் எரிசக்தி துறையில் இந்தியாவின் அதிக முதலீடுகள், திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், ரெயில்வே மற்றும் பிற துறைகளில் முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்தனர்.

    • ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது.
    • இதில் பேசிய இந்திய தூதர், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை கனடா தடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

    ஜெனீவா:

    ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் கலந்து கொண்டு பல்வேறு பரிந்துரைகளை வழங்கின.

    அப்போது பேசிய இந்திய தூதர் முகமது ஹுசைன், கனடாவில் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும், வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு அரசியலமைப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    • குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • இந்தியர்கள் காணாமல் போனது குறித்த விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை .
    • கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் முயற்சி.

    நைரோபி:

    கென்யா நாட்டில் வசிக்கும் இந்தியர்களான முகமது சமி கித்வாய் மற்றும் சுல்பிகார் அகமது கான் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் மொம்பாசா பகுதியில் கார் ஒன்றில் சென்ற நிலையில் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த கார் டிரைவர் நிகோடெமஸ் முவானியாவையும் காணவில்லை என கூறப்படுகிறது.

    இந்தியர்கள் இருவரும் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, காணாமல் போன இரண்டு இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் கென்ய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

    தலைநகர் நைரோபியில் உள்ள இந்திய தூதர் நம்க்யா கம்பா, கென்ய அதிபர் வில்லியம் சமோய் ருடோவை சந்தித்து காணாமல் போன இந்தியர்கள் குறித்த ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

    கடத்தலை அடுத்து நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அதைத் தொடர்ந்து தகவல் எதுவும் இல்லாமை மிகவும் கவலையளிக்கிறது என்றும், இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய தூதரகம் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • கூகுள் நிறுவனம் இந்தியாவை மிகவும் நேர்மறையான கட்டமைப்பில் பார்க்கிறது.
    • கூகுளுடன் இந்தியா- அமெரிக்க வர்த்தகம், தொழில்நுட்ப கூட்டாண்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று தூதர் தரண்ஜித் சிங்கை சந்தித்தார்.

    தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை முதல் முறையாக இந்திய தூதரகத்துக்கு சென்றார். அங்கு இந்திய தூதருடன், இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் முன் முயற்சிகளை பாராட்டிய சுந்தர்பிச்சை, கூகுள் நிறுவனம் இந்தியாவை மிகவும் நேர்மறையான கட்டமைப்பில் பார்க்கிறது என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக சுந்தர்பிச்சை கூறும்போது, "இந்தியா மீதான கூகுளின் அர்ப்பணிப்பு குறித்து விவாதிக்க கிடைத்த வாய்ப்பை பாராட்டுகிறேன். இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான எங்கள் ஆதரவை தொடர எதிர்பார்க்கிறோம்" என்றார்.

    இந்திய தூதர் தரண்ஜித் சிங் கூறும்போது, "கூகுளுடன் இந்தியா- அமெரிக்க வர்த்தகம், தொழில்நுட்ப கூட்டாண்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது" என்றார்.

    ×