என் மலர்

  நீங்கள் தேடியது "YSRCP"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.
  புதுடெல்லி:

  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா? அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்றும், டெல்லியில் உள்ள ஆந்திர பவன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.  இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு சால்வை போர்த்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திரப்பிரதேசம் மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  அமராவதி:

  ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

  இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

  இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது.  கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஆந்திர மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க.வுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. #ChandrababuNaidu
  ஐதராபாத் :

  ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க தலைவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்தியநாரயணா இன்று விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறிய பிறகும் பா.ஜ.க தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு, ரகசிய கூட்டணி வைத்துள்ளார். அதன் காரணமாகவே மத்திய அரசின் பல மக்கள் விரோத திட்டங்களை விமர்சனம் செய்யாமல் அவர் மௌனம் காத்துவருகிறார்.

  சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மந்திரிகள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் ஜகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பதிலேயே கவனமாக உள்ளனர். ஆனால், நான்கு வருடம் மத்திய அரசில் அங்கம் வகித்துவிட்டு தற்போது கூட்டணியை விட்டு விலகிய அவர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மாநில நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்காமல் மௌனமாக உள்ளது ஏன் ? இதுகுறித்து சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu
  ×