என் மலர்
நீங்கள் தேடியது "elected Legislative party leader"
ஆந்திரப்பிரதேசம் மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமராவதி:
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஆந்திர மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது.






