என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கமிஷனர்"

    • சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார்.

    தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. புதிய சட்டத்தின்படி தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமரின் பரிந்துரைக்கப்பட்ட மத்திய மந்திரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை தவிர்த்து அவருக்கு பதிலாக மத்திய மந்திரி குழுவில் இடம்பெற்றார்.

    தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி தவிர்க்கப்பட்ட இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இது அதிகார பிரிவினைக்கு எதிரானது என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங் தெரிவித்தார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. இந்த புதிய சட்டத்தின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    • இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
    • சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் தேர்தல் கமிஷனர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார். 2027-ம் ஆண்டு டிசம்பரில் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் மற்றொரு தேர்தல் கமிஷனராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றார். இதையடுத்து 3 பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழுவில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசை கேள்வி எழுப்பி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையமா? அல்லது தேர்தல் புறக்கணிப்பா? இன்னும் சில நாட்களில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவில் தற்போது ஒரே ஒரு தேர்தல் கமிஷனர் மட்டுமே இருப்பது ஏன்?

    நான் முன்பு கூறியது போல், சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும். வீழ்ச்சி அடைந்த கடைசி அரசியலமைப்பு நிறுவனமாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது இருக்கும்.

    மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்

    தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடு எடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும்கட்சிக்கும், பிரத மருக்கும் அனைத்து அதி காரங்களை வழங்கியுள்ள நிலையில் 23-ந் தேதி பதவி காலம் முடிந்த பிறகும் புதிய தேர்தல் கமிஷனரை நியமிக்காதது ஏன்?

    இந்த கேள்விகளுக்கு மோடி அரசு பதில் சொல்லி நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
    • வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.

    ஞானேஷ்குமார், இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி, தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

    மாநாட்டில் ஞானேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-

    நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், வட்டாரநிலையிலான அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். அவ்வப்போது இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்.

    அரசியல் கட்சிகளுக்கு எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், பதில் அளிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாண, அனைத்து சட்டப்பூர்வ நிலைகளிலும் அனைத்துக்கட்சி கூட்டங்கள், சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு தொடர்ந்து நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு தலைமை தேர்தல் அதிகாரியும் மார்ச் 31-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட துணை தேர்தல் கமிஷனருக்கு பிரச்சினை வாரியான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

    அரசியல் சட்டப்பிரிவு 325 மற்றும் பிரிவு 326-ன் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்தவொரு தேர்தல் ஊழியரோ அல்லது அதிகாரியோ மிரட்டப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    வாக்குச்சாவடிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800 முதல் 1,200 வாக்காளர்கள் இருக்க வேண்டும். வாக்காளரின் வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்குள் வாக்குச்சாவடிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்களிப்பதை எளிமைப்படுத்தவும், அதிகரிக்கவும் கிராமப்புற வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் உயரமான கட்டிடங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் கூட வாக்குச்சாவடிகள் நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நடைமுறை முதல் முறையாக செயல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×