என் மலர்
நீங்கள் தேடியது "slug 226256"
- இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன
- காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 260 கடைகள் உள்ளன. இதில் 130 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் கனகமூலம் சந்தையில் வியாபாரிகள் தங்களது கடைக்கு முன் நடைபாதையில் மேற்கூரை அமைத்து காய்கறிகள் மற்றும் பொருள்களை அதில் வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடைகளுக்கு முன் போடப்பட்டுள்ள மேற்கூரையை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் அவற்றை அகற்றவில்லை. இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் மேற்கூரை அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் கனகமூலம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வந்தனர்.
மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராம் மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையா சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது சந்தையின் ஒரு புறத்தில் இருந்த பொருட்களை மட்டும் வியாபாரிகள் மாற்றினார்கள்.
மறுபுறத்தில் இருந்த பொருட்களை மாற்றவில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் முதலில் சந்தையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு செட் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு கடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். ஆனால் வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கொண்டு வந்திருந்த ஜே.சி.பி. எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து வியாபாரிகள் ஜே.சி.பி. எந்திரம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் தரப்பில் நாங்கள் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மேல் கூரையின் கீழ் பொருட்கள் எதுவும் வைக்க மாட்டோம். அப்படி பொருட்கள் எதுவும் வைத்தால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் பொருட்களை எடுத்து செல்லுங்கள் ஆனால் மேற்கூரைகளை அகற்றக்கூடாது என்று கூறினார்கள்.
இதையடுத்து அதிகாரிகள் இது தொடர்பாக மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் மேற் கூரைகளை அகற்றாமல் சென்றனர்.தொடர்ந்து வியாபாரிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், "ஏற்கனவே கொரோனா காலத்துக்கு பிறகு நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். தற்பொழுது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மேற்கூரைகளை அகற்றுவது எங்கள் வயிற்றில் அடிப்பதற்கு சமமானதாகும். நாங்கள் ஏற்கனவே பல லட்ச ரூபாய் செலவு செய்து மேற் கூரைகளை அமைத்துள்ளோம். மேற்கூரைகளை அகற்றுவதால் காய்கறிகள் வெயிலில் நாசமாகி விடும். எனவே இதை அகற்ற கூடாது" என்று தெரிவித்தனர்.தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது.
- பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது.
- போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
கழிவு நீர் ஓடைக்கு மேல் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.வெட்டூர்ணிமடம் பகுதியில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். பார்வதிபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மேயர் மகேஷ் கமிஷனர் ஆனந்த மோகன் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஒழுகினசேரியிலிருந்து பார்வதிபுரம் வரை உள்ள சாலையில் கழிவுநீர் ஓடையின் மேல் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடந்தது.
ஜே.சி.பி. எந்திரம் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடைகள் முன்பு போடப்பட்டிருந்த சிலப்புகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் சீட்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து அங்குபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஆக்கிரமிப்புகளை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
- கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது.
துணை சேர்மன் கான்முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகரில் பல்வேறு வார்டுகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய சேர்மன் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக தேங்கும் கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் கழிவு நீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதன் அடிப்படையில் வரும் காலங்களில் ஆக்கிர மிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு குடிநீர் பாதைகளும், கழிவு நீர் பாதைகளும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக ஏற்படுத்தி தரப்படும் என்றார். இதில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
- கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது
- படிக்கட்டுகள், கடைகள் முன்பு போடப்படும் தகர சீட்டுகளையும் அப்புறப்படுத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநக ராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடந்தது.
நகர் நல அதிகாரி பொறுப்பு ஜாண், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ் ஆகி யோர் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.படிக்கட்டுகள், கடைகள் முன்பு போடப்படும் தகர சீட்டுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
சுமார் 60 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஊழியர்கள் அகற்றினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
- 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவு நீர் குழாய் அமைக்க வேண்டும்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-
வாடிப்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் உள்ள இடங்களில், ஊரணிக்கரை திறந்தவெளியில் மதுபானம் குடித்துவிட்டு பாட்டில்களை சாலையிலும், வயல்வெளி களத்தில் உடைத்து வீசி எறியும் குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாடிப்பட்டி பஸ் நிலையம் எதிரில் கல்வித்துறை அலுவலகம் அருகில் பள்ளிக் கூட வாசலில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளையும், தாதம்பட்டி மந்தையில் ஓய்வூதியர் சங்க கட்டிடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும்.
வாடிப்பட்டி பேரூராட்சி 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவுநீர் குழாய் அமைக்க வேண்டும்.
மேலும் அதன் மீது வேகத்தடை போல் அமைந்துள்ள சிமெண்டு திண்டுகளை அகற்ற வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் எளிதாக பாயும் விதத்தில் அதிகாலை நேரங்களில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
தற்போது நெல்அறுவடை பணி தொடங்க உள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் உரக்கடைகளில் விலைபட்டியல் மற்றும் பொருள் இருப்பு விவரங்களை தினந்தோறும் எழுதி வைக்க வேண்டும்.
கட்டக்குளம் கண்மாய், வடகரை கண்மாய் பகுதிகளில் முட்புதர்களை அகற்றி அதில் பல்கி பெருகியுள்ள காட்டுப்பன்றிகளை வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். சாத்தையாறு அணை பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை இருந்த இடத்தை சீரமைத்து அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏல நடவடிக்கையில் செல்லாத காசுகளை வைத்து ஏலம் நடத்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- மேலூரில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- தலைவர் முகமதுயாசின் தலைமையில் நடந்தது.
மேலூர்
மேலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் முகமதுயாசின் தலைமையில் நடந்தது.
நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சூப் பிரண்டு ஜோதி, போக்கு வரத்து போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி அன்று அனைத்து அரசு துறையினருடன் இணைந்து எவ்வித பாகு பாடின்றி ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும். அதற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாகவே ஆக்கிர மிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும், அகற்ற தவறி னால் அகற்றுவதற்கான செலவை அவர்களிடமே வசூலிக்கப்படும்.
பஸ் நிலையம் முன்புள்ள திருச்சி பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலகம் முன்பும், சேனல் ரோட்டில் உள்ள இரு பஸ் நிறுத்தங்களை பிரித்து தனித்தனியே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செக்கடி பஜாரில் உள்ள இரண்டு பஸ் நிறுத்தங்களை பிரித்து சிவங்கை ரோட்டில் ஆர்.சி. பள்ளி அருகிலும், திருவாதவூர் ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகிலும் அமைக்கப்படும்.
மேலூர் நகரில் 44 தள்ளு வண்டிகளுக்கு மட்டுமே வியாபரம் செய்ய தனி இடம் ஒதுக்குவது என்றும், மற்ற தள்ளுவண்டிகளுக்கு அனுமதி இல்லையென்றும், மீறி ரோட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
- ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரித்தனர்
- பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவமாணவிகள் விபத்தில்லாமல் செல்ல நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும்.
கன்னியாகுமரி :
தக்கலை பழைய பஸ்நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரித்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் அருள்சோபன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் லெனின் முன்னிலையில் தக்கலை பழைய பஸ்நிலையம் அருகில் மற்றும் இரணியல் ரோடு செல்லும் பகுதியிலும் நேற்று மாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது அனுமதி இல்லாமல் வைக்க பட்ட தட்டிபோடுகள், விளம்பர பலகைகள் அகற்ற பட்டன. மேலும் இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நகராட்சி பகுதியில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.ஆனாலும் முழுமையாக அகற்ற படவில்லை. கட்சி பாகுபாடின்றி தக்கலை காவல்நிலையம் அருகில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றபடவேண்டும். அது போல போலீஸ் நிலையம் எதிரில் பல நாள்களாக வழக்கு பதிவு செய்து ரோட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவமாணவிகள் விபத்தில்லாமல் செல்ல நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
- அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ உத்தரவு.
சங்ககிரி:
சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசுகையில், சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரி மற்றும் எடப்பாடி தாலுகாவில் உள்ள வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவைகளை கணக்கெடுத்து மேற்கண்ட துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.
மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் தாசில்தார்கள் பானுமதி (சங்ககிரி), லெனின் (எடப்பாடி) டி.எஸ்.பி. அரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் தேவி, பி.டி.ஓ. முத்து(சங்ககிரி), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுலைமான்சேட் (சங்ககிரி), பழனிமுத்து (அரசராமணி) உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் விதத்தில் மேயர் மகேஷ் மற்றும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
- சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகரில் சாலையோரங்களில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் விதத்தில் மேயர் மகேஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பார்வதிபுரம், வடசேரி, கோட்டார் பகுதிகளில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் செட்டி குளத்தில் இருந்து மேல ராமன்புதூர் செல்லும் சற்குண வீதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்ப தாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து நேற்று மேயர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அவற்றை அப்புறப்படுத்த மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.
மேலும் அந்த சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சற்குணவீதி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. கடைகள் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகள் மற்றும் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டது.
மேலும் சாலையில் நிறுத்தப்ப ட்டிருந்த இருசக்கர வாகனங்களை கடையின் உரிமையாளர்களே அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் சற்குண வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.
- பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி எல்லையில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதன் அருகே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, வெற்றி அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில், தூய்மை காக்கும் உறுதிமொழியேற்பு நடந்தது.மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். மண்டல குழு தலைவர், கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குளத்தின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி துவங்கியது.நீண்ட நாள் திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை மேயர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சீரமைப்பு பணிகள் செய்து பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.
- அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் -ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள பொத்தனூரில் தார் சாலையின் இருபுறமும் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பிளாஸ்டிக் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.
இந்த சிமெண்ட் பைப் கம்பெனி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு கடைக்காரர்களும் தார் சாலையின் இருபுறமும் ஓரத்தில் தங்களது விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். அதேபோல் கடைக்காரர்கள் பலர் தார் சாலை வரை ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பால கிருஷ்ணன் தலைமையில் சாலை ஆய்வாளர்கள் சங்கர், சிவகாமி மற்றும் சாலை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.