search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் ஆக்கிரமிப்புகள் குறித்து கோட்ட அளவிலான குழு கூட்டம்
    X

    கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய ஆர்.டி.ஓ. சவுமியா, அருகில் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் உள்ளார்.

    சங்ககிரியில் ஆக்கிரமிப்புகள் குறித்து கோட்ட அளவிலான குழு கூட்டம்

    • சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ உத்தரவு.

    சங்ககிரி:

    சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசுகையில், சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரி மற்றும் எடப்பாடி தாலுகாவில் உள்ள வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவைகளை கணக்கெடுத்து மேற்கண்ட துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

    மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் தாசில்தார்கள் பானுமதி (சங்ககிரி), லெனின் (எடப்பாடி) டி.எஸ்.பி. அரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் தேவி, பி.டி.ஓ. முத்து(சங்ககிரி), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுலைமான்சேட் (சங்ககிரி), பழனிமுத்து (அரசராமணி) உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×