search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வேண்டுகோள்
    X

    வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. 

    நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வேண்டுகோள்

    • நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    • 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவு நீர் குழாய் அமைக்க வேண்டும்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-

    வாடிப்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் உள்ள இடங்களில், ஊரணிக்கரை திறந்தவெளியில் மதுபானம் குடித்துவிட்டு பாட்டில்களை சாலையிலும், வயல்வெளி களத்தில் உடைத்து வீசி எறியும் குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வாடிப்பட்டி பஸ் நிலையம் எதிரில் கல்வித்துறை அலுவலகம் அருகில் பள்ளிக் கூட வாசலில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளையும், தாதம்பட்டி மந்தையில் ஓய்வூதியர் சங்க கட்டிடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

    வாடிப்பட்டி பேரூராட்சி 6-வது வார்டில் பதிக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்கள் மீது கழிவுநீர் குழாய் அமைக்க வேண்டும்.

    மேலும் அதன் மீது வேகத்தடை போல் அமைந்துள்ள சிமெண்டு திண்டுகளை அகற்ற வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் எளிதாக பாயும் விதத்தில் அதிகாலை நேரங்களில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    தற்போது நெல்அறுவடை பணி தொடங்க உள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வாடிப்பட்டி பகுதியில் உரக்கடைகளில் விலைபட்டியல் மற்றும் பொருள் இருப்பு விவரங்களை தினந்தோறும் எழுதி வைக்க வேண்டும்.

    கட்டக்குளம் கண்மாய், வடகரை கண்மாய் பகுதிகளில் முட்புதர்களை அகற்றி அதில் பல்கி பெருகியுள்ள காட்டுப்பன்றிகளை வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். சாத்தையாறு அணை பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

    பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை இருந்த இடத்தை சீரமைத்து அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏல நடவடிக்கையில் செல்லாத காசுகளை வைத்து ஏலம் நடத்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×