என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    செட்டிகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் விதத்தில் மேயர் மகேஷ் மற்றும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகரில் சாலையோரங்களில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் விதத்தில் மேயர் மகேஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பார்வதிபுரம், வடசேரி, கோட்டார் பகுதிகளில் சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் செட்டி குளத்தில் இருந்து மேல ராமன்புதூர் செல்லும் சற்குண வீதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்ப தாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து நேற்று மேயர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அவற்றை அப்புறப்படுத்த மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    மேலும் அந்த சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சற்குணவீதி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. கடைகள் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகள் மற்றும் படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டது.

    மேலும் சாலையில் நிறுத்தப்ப ட்டிருந்த இருசக்கர வாகனங்களை கடையின் உரிமையாளர்களே அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் சற்குண வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×