என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தக்கலை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
  X

  தக்கலை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரித்தனர்
  • பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவமாணவிகள் விபத்தில்லாமல் செல்ல நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும்.

  கன்னியாகுமரி :

  தக்கலை பழைய பஸ்நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரித்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் அருள்சோபன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் லெனின் முன்னிலையில் தக்கலை பழைய பஸ்நிலையம் அருகில் மற்றும் இரணியல் ரோடு செல்லும் பகுதியிலும் நேற்று மாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

  அப்போது அனுமதி இல்லாமல் வைக்க பட்ட தட்டிபோடுகள், விளம்பர பலகைகள் அகற்ற பட்டன. மேலும் இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

  நகராட்சி பகுதியில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.ஆனாலும் முழுமையாக அகற்ற படவில்லை. கட்சி பாகுபாடின்றி தக்கலை காவல்நிலையம் அருகில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றபடவேண்டும். அது போல போலீஸ் நிலையம் எதிரில் பல நாள்களாக வழக்கு பதிவு செய்து ரோட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவமாணவிகள் விபத்தில்லாமல் செல்ல நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

  Next Story
  ×