search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "regarding"

    • வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாரர் சக பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    • இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் வீட்டு பிரச்சினை தொடர்பாக தகராறு உள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் 18-வது வார்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் வீட்டு பிரச்சினை தொடர்பாக தகராறு உள்ளது. வீட்டு மனை பட்டாவை ரத்து

    செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாரர் சக பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்துள்ளார் .

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஆறுமுகம் தரப்பை சேர்ந்தவர்கள் பிரச்சினைக்கு உரிய வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்களை திருடி சென்று விட்டதாக பாலசுந்தரம் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் ஆறுமு கம், லோகேஸ்வரன், தில்லை நாயகம், கோவிந்தராஜ், சக்தி வேல், கோகுல்ராஜ், பூபாலன், கணேசன், பிரபு, அருள்காந்தி, இளவரசன், செந்தில், சதீஷ்குமார் உள்பட 23 பேர் மீது இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ உத்தரவு.

    சங்ககிரி:

    சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசுகையில், சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரி மற்றும் எடப்பாடி தாலுகாவில் உள்ள வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவைகளை கணக்கெடுத்து மேற்கண்ட துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

    மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் தாசில்தார்கள் பானுமதி (சங்ககிரி), லெனின் (எடப்பாடி) டி.எஸ்.பி. அரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் தேவி, பி.டி.ஓ. முத்து(சங்ககிரி), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுலைமான்சேட் (சங்ககிரி), பழனிமுத்து (அரசராமணி) உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×