search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic elimination"

    • மாரத்தான் ஓட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் காயத்ரி பரிசுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மகாராஜநகர் ஸ்ரீ ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஜெயேந்திரா கல்விக் குழுமங்களின் இயக்குனர் ஜெயேந்திரன் மணி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட உடற்கல்வி அலுவலர் கிருஷ்ண சக்ரவர்த்தி சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்பு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    500- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் ஓட்டம் ஜெயேந்திரா பள்ளியில் தொடங்கி அன்புநகர், பெருமாள்புரம் கார்த்திக் நர்சிங் ஹோம் வழியாக சென்று,பெருமாள்புரம் தபால்நிலையம், பெருமாள்புரம் ரெயில்வே பீடர் ரோடு வழியாக மீண்டும் பள்ளியை வந்த டைந்தது.

    சிறப்பு விருந்தினராக சுதர்சன் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் காயத்ரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஒட்டன்சத்திரம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • இதில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் பொருளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை வழங்குதல் என்ற நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி

    கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், ஒன்றிய துணை தலைவர் தங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி சக்திவேல், துணைத் தலைவர் வளர்மதிசெல்லமுத்து, 16புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி, போடுவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா (கிராம ஊராட்சி) , மணிமுத்து (வட்டார வளர்ச்சி) , தொப்பம்பட்டி பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், அரசு அலுவலர்கள், உதவி தலைமை ஆசிரியர் பார்த்திபன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • செயல்திட்டத்தை உருவாக்கி, காலக்கெடுவுக்குள் செயல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
    • பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்ற தொழில்களில் ஈடுபட அரசு உதவி.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ திறம்பட செயல் படுத்துவதற்கு, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர் அல்லது நிர்வாகி தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய அளவிலான பணிக்குழுவும் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகள் ஒரு விரிவான செயல்திட்டத்தை உருவாக்கி, அதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைக்காக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கூடுதலான உதவிகளை வழங்குகிறது. தூய்மை இந்தியா திட்டம் 2.௦ வின் கீழ், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிற பொருட்களை தயாரிப்பதற்கும், மற்ற தொழில்களில் ஈடுபடுவதற்கும் மத்திய அரசு உதவி செய்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பங்கேற்றார்.
    • பேரணியில் பள்ளி மாணவ- மாணவிகள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பொதுமக்க ளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப்பை பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அன்புக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி மாணவ- மாணவிகள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார், ஊராட்சி எழுத்தர் தண்டபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோவிந்தன், அமிர்தவள்ளி கார்த்திகேயன், வீரம்மாள், ராஜவேல், கிராம உதவியாளர் லட்சுமி, துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் வசூல் செய்யப்பட்டது
    • 11 சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் சோதனை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பிளாஸ்டி பயன்படுத்துபவா்களை கண்காணித்து அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

    சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வந்தால் கல்லாறு, பா்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனா். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூா், ஊட்டி, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதில் ஊட்டி நகரப் பகுதியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வட்டாட்சியா் ராஜசேகரன், வருவாய் ஆய்வாளா் மகேந்திரகுமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.இந்த ஆய்வின்போது மாா்க்கெட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.38,500 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற சோதனைகளில் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.சோதனையின்போது ஊட்டி மாவட்ட நகராட்சி மாா்க்கெட் பகுதியில் குட்கா விற்பனை செய்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×