search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில்  ரூ.1 லட்சம் அபராதம்
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ரூ.1 லட்சம் அபராதம்

    • நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் வசூல் செய்யப்பட்டது
    • 11 சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் சோதனை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பிளாஸ்டி பயன்படுத்துபவா்களை கண்காணித்து அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

    சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வந்தால் கல்லாறு, பா்லியாறு, குஞ்சப்பனை உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனா். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூா், ஊட்டி, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதில் ஊட்டி நகரப் பகுதியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, வட்டாட்சியா் ராஜசேகரன், வருவாய் ஆய்வாளா் மகேந்திரகுமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.இந்த ஆய்வின்போது மாா்க்கெட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.38,500 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற சோதனைகளில் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.சோதனையின்போது ஊட்டி மாவட்ட நகராட்சி மாா்க்கெட் பகுதியில் குட்கா விற்பனை செய்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×