ஒட்டன்சத்திரம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் பொருளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை வழங்குதல் என்ற நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி

கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், ஒன்றிய துணை தலைவர் தங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி சக்திவேல், துணைத் தலைவர் வளர்மதிசெல்லமுத்து, 16புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி, போடுவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா (கிராம ஊராட்சி) , மணிமுத்து (வட்டார வளர்ச்சி) , தொப்பம்பட்டி பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், அரசு அலுவலர்கள், உதவி தலைமை ஆசிரியர் பார்த்திபன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com