என் மலர்

  நீங்கள் தேடியது "Namathu Amma"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
  சென்னை:

  பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.

  இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

  பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.

  இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.

  125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.

  இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

  இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்.


  இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

  ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. #ADMK #MKStalin #MekedatuDam
  சென்னை:

  அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு கரைபுரள விடமாட்டோம் என கங்கணம் கட்டி செயல்படுவது கர்நாடகத்தை ஆளுகிற காங்கிரஸ் கூட்டணி அரசு என்றிருக்க, அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டே, மேகதாதுக்கு எதிராகப் போராட்டம் என்று தி.மு.க. நடத்துவது பித்தலாட்டத்தின் உச்சமல்லவா?

  இப்படித்தான், இத்தாலி காங்கிரசோடு அன்றும் இணை பிரியாமல், மத்தியிலே கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டு, ஈழத்து இன அழிப்பை முன்னின்று நடத்துவதற்கு துணை போன தி.மு.க. மொத்தத்தையும் முடித்துவிட்டு தமிழினத்தை ஏமாற்ற அண்ணாவின் கல்லறையை, உண்ணா நோன்பு நாடகம் நடத்தும் மேடையாக்கி, உலகமே சிரிக்க மோசடி கூத்து நடத்தியது.

  அவ்வழியிலேயே இப்போதும் தமிழின துரோக காங்கிரசோடு கூட்டணியை தொடர்ந்து கொண்டே, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் தரங்கெட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.


  பாராளுமன்றத்திலே சிறு குறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதாக வாக்களித்துவிட்டு தமிழகத்து வணிகர்களை ஏமாற்ற இங்கே வந்து வால்மார்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

  அது போலவே, பொன் விளையும் பூமியை புல்லும் முளைக்காத பாலைவனமாக்கவும், விளைநிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் விபரீதங்கள் நிகழ்த்தவும், அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் அணி வகுத்த மீத்தேன், கெயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு பக்கம் ஒப்பந்தக் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு, மறுபக்கம் மீத்தேனுக்கு எதிர்ப்பு என்று கனிமொழியை அனுப்பி கண்டனக் கடிதம் கொடுப்பதுமாக, காலமெல்லாம் தி.மு.க. ஆடி வரும் மோசடி கூத்தில் மேலும் ஒன்றாகவே அமைகிறது மேகதாதுவுக்கு எதிராக தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டமும், ஆர்ப்பாட்டமும்.

  மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், அந்த காங்கிரஸ் கட்சியோடு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஒரு வார்த்தை பேசுவதற்கு துப்பில்லாத தி.மு.க. இன்னும் எத்தனை நாடகங்கள் நடத்தினாலும், நற்றமிழ் பூமி அதனை ஒரு நாளும் நம்பாது... காரணம்... காவேரி கன்னடர்க்கு, கச்சத்தீவு சிங்களர்க்கு... முல்லையாறு கேரளர்க்கு... முள்ளிவாய்க்கால் மட்டுமே தமிழர்க்கு என்று இடஒதுக்கீடு பெற்றுத்தந்த துரோக இயக்கம் தி.மு.க. என்பதை ஒவ்வொரு தமிழனும் உதிரத்தில் அல்லவா எழுதி வைத்துள்ளான்.

  அதனால் குறிஞ்சிமலர் நடிகர் ஸ்டாலின் போடுகிற கூப்பாடு ஒருநாளும் அரசியலுக்கு பயன்தராத அரை வேக்காடுதானே.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ADMK #DMK #MKStalin #MekedatuDam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாமானியனின் கவலை சர்க்காருக்கு புரியவில்லை என பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வின் நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியாகியுள்ளது. #ADMK #CentralGovt #PetrolPriceHike
  சென்னை:

  அ.தி.மு.க.வின் நாளேடான நமது அம்மாவில் “ஆவேசக் கூச்சலும், அடிவயிறு எரிச்சலும்..” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

  * கதர் கட்சி ஆண்ட காலத்திலான ஏராள ஊழல்கள் இப்போது இல்லைதான்.

  * ஊழல் இல்லை என்கிற அதே வேளையில்மனிதன் நிம்மதியாய் வாழும் சூழலில்லை என்கிற அளவுக்கு பெட்ரோல்- டீசல் விலையேற்றம் பெருங்கவலை தருகிறதே...

  * எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே...

  * சிலிண்டர் விலைறேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே... நித்திரை துறக்குதே...

  * அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே... இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குதே...

  * உலகத்தின் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் என்றிருக்க... இதுவரை காணாத இந்திய பணத்தின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்வோரை ஏகத்துக்கும் அழிக்குதே... இதனால் ஆட்குறைப்பு வேலை இழப்பு ஏராளமாய் நடக்குதே....

  * ஒரு புறம்... வருமான வரி கடுமை. மறுபுறம்... இவ்வுலகில் இல்லாத அளவுக்கு இருபத்தெட்டு சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வசூலிக்கும் கொடுமை...


  இந்த வரிவிதிப்பு வதையில் இருந்து... பெட்ரோல்- டீசலுக்கு விலக்கு தரமாட்டோம் என்கிற பிடிவாத நிலைமை....

  * மேலும் தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை... அத்தனையும் சேர்ந்துதான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ....

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #CentralGovt #PetrolPriceHike
  ×