search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MPs Suspended"

    • கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
    • இதுவரை மொத்தம் 141 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் ஒரு கும்பல் புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. உடனே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். இதனால் அவையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது.

    இதையடுத்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சபையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

    12 மணிக்கு மீண்டும் சபை கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், சுப்ரியா சுலே, சசிதரூர், மணிஷ் திவாரி, டிம்பிள் யாதவ் உள்பட 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதுவரை மொத்தம் 141 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தி,மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

    பாராளுமன்றத்துக்கு வெளியில் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்.கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பானர்ஜி என்ற எம்.பி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை கேலி செய்யும் வகையில் மிமிக்ரி செய்தார். இந்த செயலுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கல்யாண் பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

    • பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    • 2 மணிக்கு பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 14 எம்.பி.க்கள் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.

    பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் அவை அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    2 தினங்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்பட்டதாக தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், அண்ணாதுரை, கலாநிதி வீராச்சாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், காங்கிரஸ் எம்.பி.க்களான ஆதிரஞ்சன் சௌத்ரி, திருநாவுக்கரசர், விஜய் வசந்த் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 31 மக்களவை உறுப்பினர்கள் இன்று ஒரே நாளிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 15பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 46பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

    • குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்க முடியாது.
    • எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்திற்கு வெளியேயும், மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு, இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தீர்மானம் நிறைவேற்றி கனிமொழி உள்பட 13 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க முடியாது. அதேபோல் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில்,எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் வருகிற 18-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!
    • பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.

    சென்னை:

    பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே!

    பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே!

    அவையில் மட்டுமல்ல..

    பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது.

    ஆனால் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம்.

    இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

    இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேரின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது.

    பா.ஜ.க. அரசின் சகிப்புத்தன்மையற்ற செயலைக் கண்டிக்கிறேன்.

    பாராளுமன்றம் விவாதம் நடத்தும் அவையாக இருக்கவேண்டும்.

    எம்.பி.க்களின் கருத்துரிமையைப் பறிப்பது புதிய பாராளுமன்ற விதிமுறையா?

    பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எம்பிக்களை தண்டிப்பதா?

    எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயல்படக் கூடாது.

    எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
    • நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

    இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் விவரம்:-

    கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், நடராஜன், கௌதம சிகாமணி, பென்னி பெஹனன், ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், பிரதாபன், டெரிக் ஓப்ரையன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன்.

    • பாராளுமன்றத்தில் மொத்தம் 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
    • சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து உறுப்பினர்னர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் (மக்களவை 4, மாநிலங்களவை 20) செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சுஷிர் குமார் குப்தா, சந்தீப் குமார் பதக், சுயேட்சை எம்.பி. அஜித்குமார் புயான் ஆகியோர் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 27 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

    ×